சென்னை, ஆக.8 உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் அறிவியல்சார் சிந்தனையைத் தாய்மொழியில் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனமான டி.ஒய்.ஏ.யு இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இணையவழிக் கருத் தரங்கு மற்றும் இணையவழியில் ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்வையிடும் நிகழ்வை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சிக் கூடத்தில் விஞ்ஞானியாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருபவர் முனைவர்.எபினேசர் செல்லசாமி எட் வின். அவர் சூரிய ஆராய்ச்சிக் கூடத்தில் செய்து வரும் ஆராய்ச்சிகள் பற்றியும், கடந்த காலத்தில் எவ்வாறு சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிகளை இந்த ஆய்வுக் கூடத்தில் செய்து வந்தனர் என்பது பற்றி யும், தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து விளக்குகிறார்.
இந்த நிகழ்ச்சி இன்று (8.8..2021) காலை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அதன் தொடர்ச்சி யாக சூரிய ஆராய்ச்சிக் கூடத்தின் பல்வேறு தொலை நோக்கிகளை இணையவழியில் அவரவர் வீடுகளில் இருந்தே பார்க்கும் நிகழ்ச்சியும் திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment