தருமபுரி,ஆக.7- தருமபுரி மாவட் டம் நல்லம்பள்ளி ஒன்றியம் மிட்டாரெட்டிஅள்ளி அம்பேத்கர் மன்றத்தில் 5-.8-.2021 அன்று மாலை 3 மணி அளவில் மாவட்ட கழகத் தலைவர் வீ. சிவாஜி தலைமையில், தருமபுரி மண்டல கழகத் தலைவர்
அ. தமிழ்ச்செல்வன், மாவட்ட செய லாளர் மு.பரமசிவம் ஆகியோர் முன்னிலையில் மாணவர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
மாணவர் சந்திப்புக் கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தோழர்கள் திராவிட மாணவர் கழக அமைப்பில் இணைவதாக கூறினர்.
அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் கொள்கை மற்றும் கட்டுப்பாடுகள்,மாணவர் அமைப்புக்கான பணிகள் பற்றி கழகப் பொறுப்பாளர்கள் விளக்கிக் கூறினர்.
திராவிட மாணவர் கழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெயர்களை கொடுத்ததுடன், வாரம் ஒரு முறை மாணவர்களுட னான கொள்கை விளக்க பிரச்சார கருத்தரங்குகளை நடத்துவது எனவும், தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும், வருகிற 8-.8-.2021 அன்று மதியம் 2 மணி அளவில் மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் த.யாழ்திலீபன், மாவட்ட மாணவர் கழக தலைவர் சமரசம் ஆகியோரை அழைத்து திராவிட மாணவர் கழகத்தில் சேர வேண்டும் ஏன்? என்ற தலைப்பில் மாணவர் களிடையே பேசுவது என முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் புதிய தோழர்கள் சே.சூர்யா,ஆ. சச்சின் குமார், சி. சிறீராம், ச.சாணக்கியா,சி. ரமேஷ், ஆ.சஞ்சய்குமார், சே.மணி வாசகம், எம்.சதீஷ்குமார் மற்றும் கிராமத்தைச்சேர்ந்த மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment