கோவை - பொள்ளாச்சியில் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற புதிய மாணவர்கள் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

கோவை - பொள்ளாச்சியில் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற புதிய மாணவர்கள் சந்திப்பு

கோவை ஆக.7- கோவை மண்டல பெரியாரியல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற இருபால் மாணவர்களுக்கு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பாராட்டுவிழா பொள்ளாச்சி மதிமுக அலுவலகத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு பொறியாளர் தி.பரமசிவம் தலை மையில் நடைபெற்றது. வரவேற்புரையினை மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சு.ஆனந்த்சாமி வழங்கினார்.

கோவை மாவட்ட செயலாளர் திக.செந்தில்நாதன், தாராபுரம் மாவட்ட செயலாளர் .சண்முகம், பொள்ளாச்சி நகர தலைவர் .வீர மலை, நகர செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் இணைப்புரையை மிகச் சிறப்பாக வே.தமிழ்முரசு வழங்கி னார்.

கழகப் பேச்சாளர் புலியகுளம் .வீரமணி, கோவை மண்டல மாண வர் கழக செயலாளர் மு.ராகுல். கோவை மண்டல இளைஞரணி செயலாளர் .பிரபாகரன், செழி யன்,  மாவட்ட மாணவர் கழக செயலாளர் வெ.யாழினி, பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் .மு. ராஜா உள்ளிட்ட கழகத் தோழர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தொடர்ந்து பெரியாரியல் பயிற்சி பெற்ற புதிய மாணவ தோழர்கள் திவ்யவாசுசி ரவிச் சந்திரன், வின்சன்ட் ரவிச்சந்திரன், யாழ் மதிவதனி, .தமிழினி சரண்யா, .சத்தியா, மூ.சிவனேஸ் வரன், .வசந்தகுமார், .ஜெயராமன், ..யாழினி, வின்சன்ட ரவிச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

மாணவர்கள் தாங்கள் பயிற்சி வகுப்பில் தந்தை பெரியாரின் லட்சி யமான ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பெண்ணடிமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, போன்ற திராவிட இயக்க மனிதநேய பெரியாரியல் கொள்கைகளை சமத்துவ சமுதாயம் அமைய உழைத்த தந்தை பெரியார் குறித்து இந்த பயிற்சி வகுப்பில் தாங்கள் ஏராளமான செய்திகளை கற்றுக் கொண்டதை மகிழ்ச்சியோடு தெரிவித்ததோடு இனி திராவிடர் கழகத்தில் இணைந்து தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் தந்தை பெரியாரின் லட்சியங்களை சுயமரியாதை கொள்கைகளை தங்கள் பகுதிகளில் பரப்பும் பணியில் தங்களுடைய பங்களிப்பை வழங்கவும் தயாராக இருப்பதாக இருபால் மாணவச் செல்வங்களும் உணர்ச்சியோடு தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டனர்.

பயிற்சி பெற்ற மாணவர்களை பாராட்டி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் .சந்திரசேகர் அவர்கள் வாழ்த்துரை வழங்கி மாணவர்கள் அனைவருக் கும் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பொறியாளர் தி. பரமசிவம் வழங்கிய பெரியார் .வெ.ராமசாமி வாழ்க்கைக் குறிப்புகள், புத்தகம் மற்றும் கோவை மாவட்ட திராவிடர் கழகம், பெரியார் புத்தக நிலையம் சார்பில் அய்யாவின் அடிச்சுவட்டில்,  பெண் ஏன் அடிமையானாள்?,  திராவிட மாணவர் கழகத்தில் சேரவேண்டும் - ஏன்?, ஆகிய புத்தகங்கள் மாண வர்கள் அனைவருக்கும் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்வில் இளைஞரணி துணை செயலாளர் திக.வெற்றிசெல்வன், வடிவேல், ரவிச்சந்திரன், சகுந்தலா, வீ.வருண் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். நிறைவாக மாவட்ட துணை செயலாளர் சி.மாரி முத்து நன்றியுரையாற்றி

னார்.

No comments:

Post a Comment