அனைத்து கால்நடை சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தினர் தமிழர் தலைவரிடம் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

அனைத்து கால்நடை சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தினர் தமிழர் தலைவரிடம் கோரிக்கை

அனைத்து கால்நடை சந்தை வியாபாரிகள் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக, மாடுகள் வியாபாரத்தில் மாடுகளை லாரிகளில் கொண்டு செல்லும் பொழுது ஏற்படும் இன்னல்கள் மற்றும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மற்றும் தமிழகத்தில் இயங்கி வந்த அனைத்து கால்நடை சந்தைகளை திறப்பது சம்பந்தமாகவும் தமிழ்நாடு அரசிற்கும், தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்வதற்காக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்திக்கும் பொழுது மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் தாம்பரம் வி. யாக்கூப்  உடனிருந்தார். சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன், செயலாளர் முகமது ஜாஹீர், பொருளாளர் காளிதாஸ், துணைத்தலைவர் ரத்தினம் மற்றும் நாமக்கல் மணி ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து மனு அளித்தனர். தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் .முத்தையன் உடன் உள்ளார் (சென்னை, 3.8.2021)

No comments:

Post a Comment