உயரத்தில் இருந்து தண்ணீரில் குதிக்கும் டைவ் போட்டிகளில் புகழ்பெற்றவர் பிரிட்டனைச் சேர்ந்த டோம் டிலே. 10 மீட்டர் ஒருங்கிணைந்த முக்குளிப்புப் போட்டியில் அவர் தமது முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்றார்.
பிரிட்டனைச் சேர்ந்த அவர், முக்குளிப்பில் கை தேர்ந்தவர். அத்தோடு அவர் ஸ்வெட்டர் பின்னுவதிலும் திறமைவாய்ந்தவர் என்பது உலகத்துக்கே இப்போது தெரியவந்துள்ளது.
பெண்கள் 3 மீட்டர் ஸ்பிரிங்போர்டு இறுதிப் போட்டி நடந்துகொண்டிருந்தது. உலகெங்கும் உள்ள ரசிகர்கள் அதை ஆர்வமாகத் தங்கள் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அதைக் காண டோம் டிலேவும் பார்வையாளராக வந்திருந்தார். அப்போது விளையாட்டை கவனித்துக் கொண்டு இடைவேளை நேரத்தில் ஸ்வெட்டர் ஒன்றை பின்னிக்கொண்டு இருந்தார்.
அந்தப் படங்கள் உலகெங்கும் மிகவும் பிரபலமாகின. மேலும் அவர் பின்னுவதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகத்தளங்கள் பலவற்றிலும் வெளியிடப்பட்டன.
இது தொடர்பாக அவர் கூறும் போது பின்னுவது என் ரகசிய ஆயுதம். மன அமைதியுடன் இருக்கவும், இந்தக்கலை எனக்கு உதவுகிறது. ஒலிம்பிக் போட்டிக்காகப் பயிற்சியின் போது மனதை ஒருமுகப்படுத்த இந்த கலை எனக்கு பேருதவியாக இருந்தது, இதை நான் எனது பாட்டியிடம் இருந்து கற்றுக்கொண்டேன், சிலர் இது பெண்கள் செய்யும் வேலை என்கிறார்கள் என்னைப் பொறுத்தவரை இதுவும் எனது பயிற்சியின் ஒரு அங்கம் தான் என்றார்.
நான் தங்கம் வென்ற பிறகு இந்த ஸ்வெட்டெர் பையில் போட்டு வைத்துகொள்வேன் என்றார். அதே போல் நான் தங்கம் வென்றேன். அந்தப்பையில் பத்திரமாக வைத்துகொண்டேன் என்று கூறி அந்தப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.

No comments:
Post a Comment