1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் நேச நாடுகள் ஜப்பான் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்தின.
ஹிரோஷிமா நகரத் தின் மீது வீசப்பட்ட (5.8.1945) அணுகுண்டிற்கு அமெ ரிக்கா வைத்த குறிப்பெயர் “சின்னப் பையன்” (little boy)என்பதாகும். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட (8.8.1945) அணுகுண்டிற்கு ”கொழுத்த மனிதன்” (Fat man) என்ற குறிப்பெயர் சூட்டினர்.
அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கின்றது.

No comments:
Post a Comment