மத்தூர், ஆக. 6- கிருட்டினகிரி மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம், பெரியார் பிஞ்சு சந்தா வழங் குதல், பெரியாரியல் பயிற்சி பெற்ற மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் மாவட்ட தலைவர் த. அறிவரசன் தலைமையில் மத்தூரில் 1.8.2021 அன்று மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கா. மாணிக்கம் அனை வரையும் வரவேற்று பேசினார். மண்டல இளை ஞரணி செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். முதலில் இக்கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன் தொடக்க உரையாற்றினார். .அதில் திராவிடர் கழகத்தைப் பற்றியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிறப்புகளைப் பற்றியும், வருகின்ற செப்டம்பர் 17, தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழாவை மாவட்டம் முழு வதும் எப்படி சிறப்பாக கொண்டாடுவது என்பது பற்றியும், பெரியாரியல் பயிற்சி பெற்ற மாணவர் களிடையே திராவிடர் மாணவர் கழகத்தில் இணைந்து எப்படி பணியாற்றுவது என்பதைப் பற்றியும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
அதன்பின் பெரியாரியல் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவராக தங்களுடைய கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். அதில் ஒவ்வொரு மாணவரும் பெரியாரை பற்றி முதன் முறையாக தெரிந்துகொண்டதை பற்றியும் ,பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தாங்கள் கற்றுக் கொண்ட, தெரிந்துகொண்ட கருத்துக்களை சிறப் பாக எடுத்துக் கூறினர் .
அதன்பின் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பகுதியில் கழக வளர்ச்சி பற்றியும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எவ்வாறு சிறப்பாக மாவட்டம் முழு வதும் கொண்டாடுவது பற்றியும் மாவட்டம் முழு வதும் 143 இடங்களில் கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என்பதைப் பற்றியும் தங்கள் கருத்து களை எடுத்துக் கூறினர்.
சந்தாக்கள் வழங்கல்
மேலும் கழக பொறுப்பாளர்கள் அனைவரும் ஒவ்வொரு ஒன்றிய கழகத்தின் சார்பிலும் மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன் அவர்களிடம் பெரியார் பிஞ்சு சந்தாக்களை வழங்கினர்.
மத்தூர் ஒன்றியம் 108 சந்தாக்கள்
காவேரிப்பட்டினம் ஒன்றியம் 85 சந்தாக்கள்
பர்கூர் ஒன்றியம் 46 சந்தாக்கள்
கிருட்டினகிரி ஒன்றியம் 29
ஊத்தங்கரை ஒன்றியம் 33
மொத்தம் 301 சந்தாக்கள்
மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் ஆகி யோரின் உரைக்குப் பின்னர் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன்வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.
அதில் தந்தை பெரியர் பிறந்தநாள் விழாவை மாவட்டம் முழுவதும் எப்படி சிறப்பாக கொண் டாடுவது என்பதைப் பற்றியும், ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும் பெரியார் பிறந்த நாள் விழாவை எப்படி கொண்டாடுவது என்று எடுத்துக் கூறினார்.
இறுதியாக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் பெரியாரியல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர். மேலும் மாணவர் கழக தோழர்கள் புதிய பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
மாவட்ட மாணவர் கழக புதிய கிளைக் கழக பொறுப்பாளர்கள்
திலக் முருகேசன் (கிருட்டினகிரி நகர மாணவர் கழகத் தலைவர்), நா.கலைபாரதி (கிருட்டினகிரி நகர மாணவர் கழகச் செயலாளர்), சிந்துமதி (கிருட்டினகிரி நகர மாணவர் கழக அமைப்பாளர்), இராவணன் (பொடார் நகர மாணவர் கழக அமைப் பாளர்), சிறீதேவிகா (சின்னக்கரடிவூர் நகர மாண வர் கழக அமைப்பாளர்) எனவாறு அறிவிக்கப் பட்டனர்.
இறுதியாக மாவட்ட துணைத்தலைவர் அரங்க ரவி தன்னுடைய கருத்துகளை தெரிவித்து அனை வருக்கும் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் 1. அறிவுலக பேராசான் தந்தை பெரியார் 143 ஆவது பிறந்தநாள் விழாவை, இல்லம் தோறும் கொண்டாடி மகிழ்வதுடன் 143 இடங்களில் கழக இலட்சியக் கொடியை ஏற்றுவது என தீர்மானிக்கப்படுகிறது
தீர்மானம் 2. பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பெரியார் உயராய்வு மய்யம் நடத்திய பெரியாரியல் பயிற்சியில் பங்குபெற்ற மாணவச் செல்வங்களை இக்கூட்டம் பாராட்டி மகிழ்கிறது
தீர்மானம் 3. மருத்துவக்கல்வி மேற்படிப்பு இடங்களையும் ஒன்றிய அரசே நிரப்பும் என்ற முடிவினை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது
இக்கூட்டத்தில் கிருட்டினகிரி நகர தலைவர் கோ. தங்கராசன், கிருட்டினகிரி ஒன்றிய தலைவர் த.மாது, ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் ச.கிருஷ்ணன்,காவேரிப்பட்டினம் ஒன் றிய தலைவர்பெ. செல்வம், நகர தலைவர் ராஜேந்திர பாபு, பர்கூர் ஒன்றிய தலைவர்க. ஞான சேகரன், செயலாளர் ப.பிரதாப், ஊத்தங்கரை ஒன்றிய தலைவர் கா பொன்முடி ,செயலாளர்செ. சிவராஜ், மத்தூர் ஒன்றிய தலைவர் கி. முருகேசன், துணைத்தலைவர் தனஞ்ஜெயன், மாவட்ட பகுத் தறிவாளர் கழக செயலாளர் க. வெங்கடேசன்,ஓவியர் அணி திராவிடன், மகளிரணி உண்ணாமலை, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் இரா.நில வன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment