கையிருப்பு
ஒன்றிய அரசு சார்பில் இதுவரை 51,01,88,510 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அதில், 48,60,15,232 தடுப்பூசிகளை மாநிலங்கள் உபயோகித்துள்ளன. 2,69,06,624 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளன.
கடன் வரம்பு
கூட்டுறவுப் பணியாளர் கடன் வரம்பை ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இழப்பில் இயங்காத நகர கூட்டுறவு வங்கிகள் கடன்பெற கூட்டுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது.
வாய்ப்பு இல்லை
கரோனா பாதிப்புகள் கண்டறியப்படாமல் போகலாம். இறப்பைப் பொறுத்தமட்டில் முற்றிலும் பதிவு தவறுவதற்கான வாய்ப்பு இல்லை என ஒன்றிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரத்து
மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் ஏழுநாள்களுக்கு கோவில்பட்டி - தூத்துக்குடி ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment