அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்கீழ் ஆறு இடங்களில் புதிய சட்டக் கல்லூரிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்கீழ் ஆறு இடங்களில் புதிய சட்டக் கல்லூரிகள்

சென்னை, ஆக. 7- அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் 6 இடங் களில் சட்டக் கல்லூரிகள் தொடங் கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் டாக்டர் அம் பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும்சட்டக் கல்வி இயக்ககம் ஆகிவற்றின் கீழ் 14 அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

மேலும், புதிய சட்டக் கல்லூரி கள் தொடங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், சட்டப்பல் கலைக்கழகத்தின் கீழ் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்புகளுக்கு என தனி துறை அமைக்கப்பட்டு, அதற்கு கீழ் 6 புதிய சட்டக் கல்லூரிகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஈரோடு, மயிலாடு துறை, தென்காசி, திருப்பூர், விருது நகர் ஆகிய இடங்களில் சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்கு சட்டத்  துறை இடம் தேர்வு செய்து, உயர் கல்வித் துறைக்குப் பரிந்துரை செய்தது.

இது தொடர்பாக அண்ணா மலைபல்கலைக்கழகம் இறுதிக் கருத்தை உடனே தெரிவிக்குமாறு உயர்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அண்ணா மலை பல்கலைக்கழகத்தின் கீழ் 6 புதிய சட்டக் கல்லூரிகள் தொடங் கும் பணியை உயர்கல்வித் துறை தொடங்கியுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் செயல்படும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சட்டம், மருத்துவம், தொழில்நுட் பம், தொழிற்கல்வி உள்ளிட்ட படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. அதேபோல, தற்போது அண்ணா மலை பல்கலைக்கழகத்தின் கீழ் சட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.

அதேநேரத்தில், சட்டக் கல்லூ ரிகளின் பாடத் திட்டம் உள்ளிட்ட கல்விப் பணிகளை, சட்டப் பல் கலைக்கழகம் வரையறை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment