கலைஞர் வாழ்கின்றார் ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

கலைஞர் வாழ்கின்றார் !

பள்ளிப் பருவத்திலே கொள்கைப் பாடம்  நீ    கற்றாய்

கன்னிப் பருவத்திலே  நீ  காளையெனத்  துணிவு கொண்டாய்

எண்ணங்கள் எரிமலையாய் எழுதி நீ  புகழ் பெற்றாய்

கோவில்களா? கொள்ளைக்  கூடாரங்களா ? நீ கேட்டாய்

அம்பாள் என்றடா பேசினாள் ?

தோல்வியில்லாத் தேர்தலென்ன?  நீ தொடாத சிகரமுண்டா ?

காணாத எதிர்ப்பா? அவமானமே உரமாக்கி ஆளவந்தாய்! நீ தானே

அளப்பில்லாத் திட்டங்கள் அன்புடனே  தந்தாய் ஏழைகட்கு !

பெண்கள் அடைந்திட்ட நன்மை சொன்னால் நாள்கள் போதாதே!

பெரியாரை அண்ணாவை இதயத்தில் நீ நிறுத்திச்  செய்ததெல்லாம்

உலகம் போற்றிடுதே, இன்றும் உன் பெயரைச் சொல்லிடுதே !

வாழ்கின்றாய் நீ எங்கள் கொள்கைச் சிங்கமென

சீரிய பகுத்தறிவு வார்த்தையின் முழுப் பொருளே

"கலைஞர் " என்று சொன்னால் உலகே அறிந்திடுமே !

- மருத்துவர் சோம. இளங்கோவன்

இயக்குநர், பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா

No comments:

Post a Comment