- Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·      ஒவ்வொரு தாழ்த்தப்பட்டோர் குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் நிதி அளிக்கும் தலித் பந்து திட்டத்தை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் வசலமாரி கிராமத்தில் 75 குடும்பத்தினருக்கு வழங்கி துவக்கியுள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

· வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையையும் இணைத்திட தேர்தல் ஆணையம் தந்துள்ள வேண்டுகோளை ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது.

· பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று  (5.8.2021) விசாரணையைத் துவங்குகிறது.

· தமிழ்நாடு அரசின் 2021-2022 வரவு-செலவு அறிக்கை ஆகஸ்டு 13ஆம் தேதி சட்டமன்றத்தில் அளிக்கப்படுகிறது. அதற்கு முன்பாக, ஆகஸ்டு 9ஆம் தேதி நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராசன் வெளியிட உள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· உச்சநீதிமன்ற பதிவு அதிகாரிகள், முக்கிய வாடிக்கையாளர்களின் வழக்குரைஞர்கள், மேனாள் நீதிபதிகளின் தொலைபேசி எண்கள், பெகாசஸ் ஒட்டு கேட்பில் இருந்தது எனஒயர்என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

தி டெலிகிராப்:

· பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஜாதிகளை சேர்க்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்ட திருத்த மசோதாவுக்கு ஒன்றிய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது...

- குடந்தை கருணா  

No comments:

Post a Comment