சென்னை, ஆக.6 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணண் விருது வழங்கப்பட இருக்கிறது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை 37 வருவாய் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2020-2021ஆம் கல்வியாண்டு முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்க தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு குழுக்கள் அமைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.
அதன்படி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ - இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்பு துறை பள்ளிகள் என மொத்தம் 385 ஆசிரி யர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட இருக் கின்றன. அதன்படி, மாவட்ட தேர்வுக்குழு ஆசிரியர் களின் பட்டியலை வருகிற 14ஆம்தேதிக்குள் மாநில தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரை செய்யப் படவேண்டும் என்றும், அதன் அடிப்படையில் மாநில தேர்வுக்குழு இறுதி பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அவ்வாறு ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சில வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். அரசியலில் பங்கு பெற் றும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர் களின் பெயர்களை கண்டிப்பாக பரிந்துரைக்கக்கூடாது. கல்வியை வணிகரீதியாக கருதி செயல்படும் ஆசிரி யர்களும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களும் இந்த விருதுக்கு தகுதியற்றவர்கள் என்பது உள்பட பல்வேறு வழிமுறைகள் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதிலும் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு வழிமுறை இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, தேர்வு செய்யப் படும் ஆசிரியர் கரோனா பெருந்தொற்று காலத்தில் இணையவழி கல்வி உள்ளிட்ட மாணவர்களை நேர டியாக சென்றடையும் வகையில் கல்வி பணியாற்றி ருக்க வேண்டும். அவ்வாறு பணி செய்யாத ஆசிரியர் களின் பெயரை அறவே தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
சென்னை விமான நிலையத்தில் 30 நிமிடத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை வழங்கும் புதிய கருவிகள்
ஆலந்தூர், ஆக.6 சென்னை விமான நிலையத்தில் 30 நிமிடத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை வழங்கும் வகையில் ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர். கரு விகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுவது குறித்து கடந்த வாரம் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், லண்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, அய்ரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணி களுக்கு உடல் வெப்ப பரிசோதனையுடன், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை ரூ.900 கட்டணமாக வசூலித்து 4 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகளை 13 நிமிடங்களில் அறிவிக்கும் நவீன சோதனை முறை சில நாள்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.
அதன்படி ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கருவிகள் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை செய்ய இந்த கருவிகள் பொருத்தப்பட் டுள்ளன. இந்த கருவிகளில் பரிசோதனை முடிவுகள் 30 நிமிடங்களில் வழங்கப்படும். இந்த புதிய கருவியின் பயன்பாடு இன்று (6.8.2021) முதல் தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். துபாய் செல்லும் பயணிகளுக்கு இது பெரும் வசதியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment