நாடாளுமன்றத்துக்கு ஊர்வலமாக செல்ல தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு டில்லி காவல்துறை தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 6, 2021

நாடாளுமன்றத்துக்கு ஊர்வலமாக செல்ல தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு டில்லி காவல்துறை தடை

புதுடில்லி,ஆக.6- ஒன்றிய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டில்லி விவசாயிகள் பல மாதங்களாகப் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு அளிக்க சென்னையிலிருந்து ரயில் மூலம் சுமார் 800 விவசாயிகள் நேற்று  (5.8.2021) டில்லி வந்தனர். நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்று பிறகு, குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், அதன் தலைவர் வி.சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் இவர்கள் சென்றனர். இவர்கள் அனை வரையும் டில்லி ரயில் நிலையத்திலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் அனைவரையும் பேருந்துகளில் ஏற்றிய டில்லி காவல்துறையினர் விவசாயிகளின் போராட்டக் களமான சிங் கூருக்கு அழைத்துச் சென்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்டக் குழு உறுப் பினர் மா.முத்துராமலிங்கம் செய்தியாளர் களிடம் கூறியதாவது,

பொதுத்துறை நிறுவனங்களைப் போல், விவசாயி களையும் புதிய சட்டங்கள் மூலம் தனியாரிடம் தாரை வார்க்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இதனால் தமிழர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அரசு கொள்முதல் முதல் உணவுப் பங்கீட்டு அரிசி விநியோகம் வரை விவசாயிகளுக்கு கிடைத்து வரும் பலன்கள், இச்சட்டங்கள் மூலம் தடுக்கப்பட்டு விடும். எனவே ஆகஸ்ட் 11 வரை டில்லியில் போராட உள்ளோம்என்றார்.

தமிழ்நாட்டிலிருந்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்தவர் களும் டில்லி வந்துள்ளனர். ரயில் நிலையத் தில் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டபோது ஜந்தர் மந்தருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அங்கு ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனைத்து மாநில விவசாயிகளும் போட்டி நாடாளு மன்றக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இத னால்  காவல்துறையினர் அனுமதி மறுத் தனர். முன்னதாக, ‘ஆஷாஎன்று அழைக்கப் படும் நீடித்து நிலைத்த வேளாண்மைக் கானக் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவி லிருந்து 5 நிர்வாகிகள் டில்லி வந்தனர். இவர்கள், ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றனர். அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் பிரிவினரும் தமிழ்நாட்டிலிருந்து வந்து டில்லி போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

No comments:

Post a Comment