டில்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை - பூசாரி உள்பட 4 பேர் கைது : சிறுமியின் பெற்றோருக்கு ராகுல் காந்தி ஆறுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 6, 2021

டில்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை - பூசாரி உள்பட 4 பேர் கைது : சிறுமியின் பெற்றோருக்கு ராகுல் காந்தி ஆறுதல்

புதுடில்லி,ஆக.6-டில்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட தாழ்த் தப்பட்ட சிறுமியின் பெற் றோரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ‘சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்கும் வரை உடனிருப்பேன்,’ என்று அவர்களிடம் தெரிவித்தார். 

டில்லியின் நங்கால் பகுதி யில் உள்ள சுடுகாட்டிற்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி, சுடுகாட்டில் இருக்கும் குளி ரூட்டியில் இருந்து  தண்ணீர் எடுத்து வருவதற்காக தனியாக சென்றுள்ளார். வீட்டில் பெற் றோரிடம் கூறிவிட்டு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அங்கு இருக்கும் பூசாரி உட்பட 4 பேர் சிறுமியின் தாயாரை அழைத்துள்ளனர். தண்ணீர் குடிக்கும்போது மின்சாரம் தாக்கி சிறுமி இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளனர்.

மேலும், வெளியே தகவல் தெரிந்தால் சிறுமியின் உடலை உடற் கூறாய்வு செய்வார்கள், சிறுமியின் உடல் உறுப்புகளை திருடி விற்றுவிடுவார்கள் எனக் கூறி சிறுமியின் தாயாரின் அனுமதி இன்றி உடலை எரித்துள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பூசாரி உள்ளிட்டவர்கள் கைது

புகாரின் அடிப்படையில் அங்கிருந்த பூசாரி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணை யில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தலைநகர் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை ஏற் படுத்தி உள்ளது.

ராகுல்காந்தி ஆறுதல்

இந்நிலையில், வன்கொடுமை செய்து கொல் லப்பட்ட சிறுமி யின் பெற்றோரை காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி  4.8.2021 அன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘சிறுமியின்  பெற்றோர் கேட் பது ஒன்றுமில்லை. நீதியை மட்டும்தான். அவர்கள் அதனை பெறவில்லை. அதற்கான அனைத்து உதவிகளும் அவர் களுக்கு தேவை. அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இந்த ராகுல் காந்தி அவர் களோடு இருப்பான். ஒரு அங் குலம் கூட பின்வாங்க மாட்டேன் என உறுதி அளித்துள்ளேன். அவர் களுக்கு உதவி செய்வதுதான் எனது வேலை,” என்றார்.

இது குறித்து ராகுல் தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சிறுமியின் பெற்றோ ரின் கண்ணீர் ஒன்றை மட்டும் தான் கூறுகின்றது. அவர்களின் மகள், இந்த நாட்டின் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதிக் கான இந்த பயணத்தில் நான் அவர்களுடன் இருப்பேன்,’ என்று கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘9 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என குறிப்பிட்டுள் ளார்.

நீதி விசாரணை

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறுமியின் பெற்றோரை   சந்தித்தார். அப் போது, போராட்டக் காரர்கள் அவரை சூழ்ந்து கண்டன முழக்கம் எழுப்பி னார்கள். கெஜ்ரிவால் அளித்த பேட் டியில், ‘நமது மகள் திரும்ப வரமாட்டாள். அந்த குடும் பத்துக்கு அநீதி இழைக்கப் பட்டது துயரமானது. அதை எதனாலும் ஈடு செய்ய முடி யாது. பாதிக்கப்பட்ட குடும் பத்துக்கு டில்லி அரசு ரூ.10 லட்சம் உதவி தொகை வழங் குகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதற்கு டில்லி அரசே வழக்குரைஞர்களை நியமிக்கும்,” என்றார்.

No comments:

Post a Comment