சித்தராமையா சாடல்
பெங்களூரு, ஆக. 6 பெங்களூரு விலுள்ள பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, காங்கிரஸ் மூத்தத் தலைவரும், கருநாடக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சித் தராமையா உரையாற்றியுள்ளார்.
அப்போது, “பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று உறுதியளித்தார். அதன்படி கடந்த 7ஆண்டுகளில் 14 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால்அதற்கு மாறாக இந்த காலக்கட்டத்தில் 12 கோடி வேலைகள் பறிபோய் உள்ளன” என்று சித்தராமையா கூறியுள்ளார். “மோடி மோடி என்று முழக்கம் போடும் இளைஞர்களுக்கு, பிரதமர் மோடி மூன்று நாமம் போட்டுள்ளார்” என்று சாடியுள்ளார்.
கருநாடகத்தில் எடியூரப்பா மாற்றப்பட்டு, பசவராஜ் பொம்மை புதிய முதல் அமைச்சராக்கப்பட்டு இருப்பதை ஏமாற்று நாடகம் என்று விமர்சித்துள்ள அவர், “ ஆர்.டி.ஜி.எஸ். மூலம் யாராவது லஞ்சம் வாங்கினார்கள் என்றால், அது எடியூரப்பாதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“எடியூரப்பா வுக்கு நேரடியாக அரசியல் செய்ய தெரியாது. பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வருவது, ஆபரேசன் தாமரை மூலம் சட்டமன்ற உறுப்பினர் இழுத்து முதலமைச்சர் ஆவதுதான் எடியூரப்பாவுக்கு தெரிந்த விஷயம். தற்போது பசவ ராஜ் பொம்மையையும் எடியூரப் பா-தான் முதலமைச்சர் ஆக்கியுள் ளார். அதனால் எடியூரப்பாவின் “ரப்பர்ஸ்டாம்ப்” ஆகத் தான் பசவராஜ் பொம்மை செயல் படுவார்” என்று சித்தராமையா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment