உ.பி. பா.ஜ.க. அரசின் தொடரும் சிறுபான்மை வெறுப்பு இஸ்லாமியர்களின் ஊர்வலத்திற்கு 2 ஆண்டாக தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 6, 2021

உ.பி. பா.ஜ.க. அரசின் தொடரும் சிறுபான்மை வெறுப்பு இஸ்லாமியர்களின் ஊர்வலத்திற்கு 2 ஆண்டாக தடை

லக்னோ, ஆக 6 மொகரம் ஊர்வலத்துக்கு தடை விதித்துள்ள உத்தரப்பிரதேச பாஜக காவல் துறை, அது தொடர்பான அறிக்கையில், ஷியா, சன்னி இஸ்லாமி யர்களுக்கு இடையிலான 40 ஆண்டு மோதலை குறிப்பிட்டு சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.

இஸ்லாமியக் காலண்டரின் முதல் மாதமாக வருவது மொகரம். இதன் 10-ஆவது நாள் தியாகத் திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் முஸ்லிம்கள்தாஜியாஎனும் 'புனித'ப் பதாகைகளை ஏந்தி தம் பகுதிகளில் ஊர்வலம் நடத் துவது வழக்கம். 2021-ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 10 முதல் முஸ்லிம் களின் மொகரம் மாதம் துவங்குகிறது. இந்த மொகர மிற்காக, ஷியா மற்றும் சன்னி பிரிவுகள் தனித்தனியாக இருவேறு நாட்களில் ஊர்வலத்தை நடத்துவது வழக்கம்.

இந்நிலையில், கரோனாதொற்றுப் பரவலைக் காரணம் காட்டி உத்தரப்பிரதேசத்தில் 2-ஆவது ஆண் டாக மொகரம் ஊர்வலத்திற்கு தடை விதித்துள்ள பாஜக அரசின் காவல் துறை, அத்துடன் நிற்காமல் ஷியாக்கள் அதிகம்வாழும் லக்னோ உள்ளிட்ட நகரங்களின் மொகரம் ஊர்வலங்களில் கடந்த 40 ஆண்டுகளாக நிகழ்ந்த மோதல் களையும் சுட்டிக் காட்டியுள்ளது. இது உத்தரப் பிரதேசத் தின் ஷியா, சன்னி ஆகிய இரண்டு பிரிவினரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. ஆட்சேபத்துக்குரிய வாசகங்களை  குறிப்பிட்டது கண்டனத்துக்கு உரியது. அமைதிச் சூழலைக் கெடுக்கும் வகையிலான அறிக்கையை காவல் துறை இயக்குநர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

No comments:

Post a Comment