கிருட்டிணகிரி, ஆக.6 விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி னார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிருட்டிணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப் பள்ளி கிராமத்தில் நேற்று (5.8.2021) மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இப்போது மக்களை தேடி மருத்துவம் என்ற ஒரு திட்டத்தை நம்முடைய அரசின் சார்பில் தொடங்கி இருக்கிறோம். மருத் துவமனைகளை தேடி வரக்கூடிய மக்கள், அந்த சூழலை மாற்றக்கூடிய வகையில், அதாவது மக்களை தேடி மருத்துவம் செல்லும் என்ற காலத்தை இப்போது நாம் உருவாக்கத் தொடங்கி இருக்கிறோம்.
முதல் கட்டமாக, 1,264 பெண் சுகாதார தன்னார்வலர்களும், 50 பிசியோதெரபி மருத்துவர்களும், 50 செவிலியர்களும் வீடு தேடி வரும் இந்த சேவையில் ஈடுபடுத்தப் பட இருக்கிறார்கள். இது படிப்படியாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலம் முழுவதும் இது நிச்சயமாக விரிவுபடுத்தப்படும். அவர்களுக்கான கூடு தல் சிகிச்சைகளை மருத்துவமனைகளில் வழங்குவோம். இதற்காக முதல் கட்டமாக, ரூ.242 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டி ருக்கிறது.
அதேபோல, முதல் கட்டமாக, 30 லட்சம் குடும்பங்களை சேர்ந்த ஒரு கோடி மக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க் கிறோம். “ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்” என்ற பத்தாண்டு தொலைநோக்கு திட்டத்தில் அனைவருக்கும் நல்வாழ்வு என்பது ஒரு முக்கிய உறுதிமொழியாக இருக்கிறது. அதனை நிறைவேற்றுவதற் காகத்தான் மக்களை தேடி மருத்துவம் என்ற இந்த திட்டத்தை இந்த பகுதியில் நான் தொடங்கி வைத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் டயாலிசிஸ்-க்கு நோயாளிகள் மலை கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு வருவதற்கு மிக சிரமமாக இருக்கிறது. அந்த திட்டத்தில் டயாலிசிஸ் நோயாளி களுக்கு அங்கு சிகிச்சை அளிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: அதுவும் செய்யப் போகிறோம், அதற்கான முயற்சியும் நடந்துகொண்டிருக் கிறது. போர்டபிள் எந்திரங்கள் மூலமாக அதையும் நிறைவேற்றுவதற்கான முயற் சியில் ஈடுபட்டிருக்கிறோம்.
கேள்வி: வனப்பகுதிகளில் ரத்தசோகை உள்ளவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். இந்த திட்டம் அவர்களுக்கு எந்த அள வுக்கு பயனளிக்கும்? தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த போகிறீர்கள்?
பதில்: அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் அனைத்தும் அதிக அளவில் கொடுத்து அதை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவோம்.
கேள்வி: 2000ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சியில் ஓசூர் பகுதியில் உள்ளவர்களுக் கெல்லாம் பட்டா கொடுத்தார்கள். ஆனால் வருவாய்த்துறை ஆவணங்களில் பட்டா கொடுத்ததற்கான விவரங்கள் ஏற் றப்படவில்லை. வருவாய் துறை ஆவ ணங்களே இப்போது காணாமல் போய் விட்டன. இதுபோன்று ஓசூர் தாலுகா, தேன்கனிக்கோட்டை தாலுகாவிலும் இருக்கிறது.
பதில்: இது ஓசூரில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நீங்கள் சொல்கின்ற இந்த குறைபாடுகள் இருக்கிறது. கடந்த கால ஆட்சியில் அதை முறைப்படுத்த வில்லை என்பது உண்மை. அதை முறைப் படுத்துவதற்கான முயற்சியில் இந்த அரசு முழுமையாக ஈடுபட்டிருக்கிறது.
கேள்வி: கலைஞர் ஆட்சி காலத்தில் கிருட்டினகிரி, தருமபுரி மாவட்ட மக்க ளுக்காக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்த திட்டம் இன்னும் முழுமையாக இரு மாவட்டங்களுக்கும் சென்றடைய வில்லையே?
பதில்: கடந்த 10, 15 நாள்களுக்கு முன்பு அந்த துறையினுடைய அமைச்சராக இருக்கக்கூடிய கே.என். நேரு, அவருடைய அதிகாரிகளுடன் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை முதல்-அமைச்சருக்கும், அரசுக்கும் கொடுத்திருக் கிறார்கள். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவிலேயே அது முழுமை பெறும் என்பதை நான் உறுதி யாக தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி:- கெயில் நிறுவனம் சார்பில் கிருட்டிணகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்களே?
பதில்: விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த திட்டங்களையும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி: 1,264 பெண் சுகாதார ஊழி யர்களை ஈடுபடுத்தப்போவதாக கூறினீர்கள், நிறைய கிராமங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கிறதே?
அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் இருக்கும் செவிலியர்கள் மற்றும் துணை செவிலியர்கள் உள்பட அனைவருக்கும் ஏற்கெனவே, வெளி முகமை மூலம் ஒப்பந்த அடிப்படை யில் பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 15 நாள்களாக பணி செய்து கொண்டிருக் கிறார்கள். இதில் தன்னார்வலர்களையும் பயன்படுத்தப் போகிறோம். இந்த செவிலியர்களுக்கு பணி நியமனம் மற்றும் கூடுதலாக பணி நியமனங்கள் அனைத்தும் இப்போது திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை பொறுத்தவரை, ஏறத்தாழ 25 ஆயிரம் மருத்துவம் சார்ந்த களப்பணி யாளர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் பணியமர்த்த முதல்-அமைச்சர் உத்தரவிட் டிருக்கிறார். புதிய பணியிடங்கள், ஏற்க னவே இருக்கும் பணியாளர்களை கொண்டு மொத்தம் 25 ஆயிரம் பேர் இந்த களப்பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
கேள்வி: தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கிறது. எப்போது இதற்கு தீர்வு காணப்படும்?
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: முதல்-அமைச்சரின் தொடர் வேண்டுகோள், பிரதமரிடத்தில் பேசியது, கடிதங்கள் எழுதியது போன்றவற்றின் விளைவாகக் கடந்த மாதம் 72 லட்சம் எனத் தொகுப்பில் இருந்து தருவதாக சொன்னார்கள். ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 19 லட்சம் தடுப்பூசிகளை இந்தியாவிலேயே கூடுதலாக தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தந்திருக்கிறது. காரணம், இதில் தமிழ்நாட் டினுடைய செயல்திறன் நன்றாக இருக் கிறது என்று சொல்லி, அந்த வகையில் இந்த மாதத்திற்கு 79 லட்சம் தடுப்பூசி தருவதாக சொல்லி இருக்கிறார்கள். இதுவரையில் வந்திருப்பது 2 கோடியே 39 லட்சம் தடுப்பூசிகள். இன்னும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இந்த வகையிலே தடுப்பூசிகள் எங்கும் தட்டுப்பாடு இல்லா மல் எல்லா இடத்திலும் போய் கொண்டி ருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார்.

No comments:
Post a Comment