ஆத்தூரில் திராவிட மாணவர் கழக சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 6, 2021

ஆத்தூரில் திராவிட மாணவர் கழக சந்திப்பு

தலைவாசல், ஆக. 6 ஆத்தூர் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் பெரியேரி அருள் பிரகாசு இல்லத்தில் திராவிடமாணவர்கழக சந்திப்புக்கூட்டம்  மாணவர்கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது. 

அறிவுலகப்பேராசான் தந்தைபெரியார் படத்திற்கு மாவட்டத் தலைவர் .வானவில் மாலையணிவித்து உரையாற்றினார். மாவட் டச் செயலாளர் நீ.சேகர் வரவேற்புரை யாற்றினார். கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வம் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில்,  திமுக ஒன்றிய செயலாளர் மணி, மாவட்டதிமுக விவசாய அணி அமைப்பாளர் தேவேந்திரன், ஊராட்சி தலைவர் இராசா,  வழக்குரைஞர் கோவிந்தன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் .சுரேசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் வேல்முருகன், மாவட்டப.. தலைவர் முரு கானந்தம், இராஜ்கிருஷ்னா ரெசிடன்சி உரிமையாளர் ஆத்தூர் .இராசா,  கிழக்கு இராசபாளையம் செந்தில்குமார், சேகரன், இலுப்பநத்தம் ஆசிரியர் பெரியசாமி, புனல் வாசல் மாணவர்கழக தலைவர் அசித், நடுவலூர் பா.அழகுராஜ், கா.பிரேம்குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள். இறுதியாக பேராசிரியர் சம்பத் நன்றி கூறினார்.

மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் மாயக் கண்ணன், அருள்பிரகாசு ஆகியோருக்கு  பயனாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

பெரியேரி திராவிட மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள்.

தலைவர்: செ.ஆனந்தகுமார், துணைத் தலைவர்: செ.விக்னேசு, செயலாளர்: பி.பிர காசு, துணைச்செயலாளர்: எஸ்.அருள்மணி, அமைப்பாளர்: இரா.அருண்.

No comments:

Post a Comment