‘‘திராவிடர் ஆட்சி: இருளும் ஒளியும்'' கடலூர் இள.புகழேந்தி சிறப்புரை
புதுச்சேரி, ஆக. 6- திராவிடர் இயக்க வரலாற்றில் சிறப்பான இடத்தை பெற்றவர் காரை சி.மு.சிவம். புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி அவர்களின் தந்தையார் ஆவார். சி.மு.சிவம் பிறந்த நாள் கருத்தரங்கம் மயிலாடுதுறை மொழிப் போர்தியாகி, சட்ட எரிப்பு வீரர் சுயமரியாதைச் சுடரொளி நா.வடிவேல் அவர்களின் மருமகனும், புதுச்சேரி நகர கழக செயலாளராக சிறப்பாக பணியாற்றி நினைவில் வாழும் சுயமரியாதைச் சுட ரொளி கழக செயல் வீரர் என தமிழர் தலைவரால் அழைக்கப்பட்ட த.கண்ணன் நினைவு மேடையில் 29.7.2021 அன்று மாலை 6 மணி யளவில் பெரியார் படிப்பகத்தில் சிறப்பாக நடை பெற்றது.
பெரியார் சிந்தனையாளர் இயக்க தோழர் ப.சந்திரன் தலைமை தாங்கினார். இர.சிவக்குமார் முன்னிலை வகித்தார். தோழர் சு.ஆனந்தி வரவேற்புரையாற்றினார். பெரியார் பிஞ்சுகள் தனு செங்கொடி, சந்தோஸ் கொள்கை முழக்கமிட்டு தொடங்கி வைத்த கருத்தரங்கில் புதுச்சேரி தாழ்த்தப்பட்ட மக்கள் பாது காப்பு இயக்கத்தின் தலைவர் தோழர் பி.பிரகாஷ், நடுவிரல் வலைதளம் ஜெ.புஸ்பராஜ், புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, த.கண்ணனின் இளைய மகன் க.செல்லமணி, தோழர் லெனின் சுப்பையா, பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் தீனா ஆகியோர் கருத்துரைக்கு பின் த.கண்ணன், காரை சிவம், எம்.ஏ.சண்முகம் ஆகியோரின் படங்களை திறந்து வைத்து திமுக தலைமைக் கழக பேச்சாளர், மேனாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் கடலூர் இள.புகழேந்தி அவர்கள் உலகிலேயே சமூக விடுதலைக்கு உழைத்த முதல் இயக்கம் சுயமரியாதை இயக்கமான திராவிடர் கழகமே என்றும், காரை சிவம் முயற்சியால் அம்பத்தூர் கிடா வெட்டும் நிகழ்ச்சி அடியோடு நிறுத்தப்பட்டது என்றும் கழகத் தோழர் ஒருவர் குங்குமப்பொட்டு வைத்ததை தலைவர் கலைஞர் கண் டித்ததையும், நானே கருப்புச் சட்டைக்காரன் எனது மகள் திருமணத்தில் கருப்புச் சட்டையுடன் தான் திருமணம் செய்து கொள்வேன் என எனது மருமகள் என்னிடத்தில் அனுமதி கேட்டதையும், கருப்புச் சட்டைக்காரன் இல்லையென்றால் தந்தை பெரியாரின் பெரும் கொள்கை பிரச்சாரம் நடை பெறவில்லை என்றால் நம்முடைய நிலையை எண்ணிப் பார்க்கவேண்டும் எனவும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. எனும் மதவாத சத்திகளுக்கு எதிராக மேன்மேலும் இயக்க பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். தளபதி ஆட் சிக்கு ஆசிரியரின் வழி காட்டுதல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அடுக்கடுக்கான பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளை எடுத்துக்கூறி உரை நிகழ்த்தினார். தோழர் தீனா நன்றி நவின்றார்.
நிகழ்வில் பானுமதி கண்ணன், கண்ணனின் மருமகள்கள் ஜீவிதா வீரமணி, திவ்யா செல்லமணி, பேரன்கள் வீ.ஆதித், வீ.வியன், பேத்தி செ.நிலாணி, சுதாகர், ஞானப் பிரகாசம். பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, சிவ.இளங்கோவன், தமிழ்நாடு இளையரசன், திராவிடர் எழுச்சி கழகம் விஜயகுமார், புதுச்சேரி தன்னுரிமைக் கழக தலைவர் தூ.சடகோபன், பெரியார் பெருந்தொண்டர் செ.இளங்கோவன், அரி யாங்குப்பம் கொம்யூன் கழக தலைவர் இரா.ஆதி நாராயணன், ஆ.சிவராசன், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சிவக்குமார், பரத், சமூகநீதி பாதுகாப்பு இயக்கம் தோழர் பஹீர் அகமது, திமுக பொறுப்பாளர் பி.மணிமாறன், சுரேஷ், அரியங்குப்பம் பெரியார் படிப்பக பொறுப் பாளர் லாரன்ஸ், தமிழ்ப் புலிகள் கட்சி தோழர் ஓவியன் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண் டனர்.

No comments:
Post a Comment