காசாங்காடு முத்து.துரைராஜ் தாயார் மறைவு: கழகத் தலைவர் ஆறுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

காசாங்காடு முத்து.துரைராஜ் தாயார் மறைவு: கழகத் தலைவர் ஆறுதல்

 திராவிடர் கழக பட்டுக்கோட்டை கழக மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் மதுக்கூர் ஒன்றியம் காசாங்காடு முத்து.துரைராஜ், மு. தங்கையன் ஆகியோரின் தாயார் திருமதி மு.அபூர்வம் அம்மையார் (வயது 89) உடல் நலக்குறைவால் 3-8-2021 இரவு 9 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மாவட்டத் தலைவர் பெ.வீரையன் தலைமையில் கழகப் பொறுப்பாளர்களும், சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை தலைமையில் தி.மு.. பொறுப்பாளர்களும், உறவினர்களும், நண்பர்களும் இறுதி மரியாதை செலுத்தினர். இன்று (4-8-2021) காலை 11 மணியளவில் உடல் எரியூட்டப்பட்டது

கழகத் தலைவர் ஆறுதல்

செய்தி அறிந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தோழர் முத்து.துரைராஜ் அவர்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.

தொடர்புக்கு: முத்து. துரைராஜ் 9443588157

No comments:

Post a Comment