கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவர் திம்மாபுரம் சி.சீனி வாசன் தாயார் யசோதம்மாள் அவர்கள் 3.8.2021 அதிகாலை 2.00 மணியளவில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைந்த யசோதம்மா அவர்களின் இரு கண்களும் பெங்களுர் நாராயணா இருதாலயா மருத்துவமனைக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டணம் துணை கிளை செயலாளர் செந்தில் குமார் மூலம் மருத்துவ குழுவினர் தானமாக பெற்று கொண்டனர்.
அனைத்துக்கட்சியினர் மரியாதை
கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் த.அறிவரசன், மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் தலைவர் பெ.மதிமணியன், மாவட்ட அமைப்பாளர் தி.கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிடமணி. மண்டல இளைஞரணி செயலாளர் வ. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் இல. ஆறுமுகம், இளைஞரணி செயலாளர் வே.புகழேந்தி, மேனாள் பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் செ.ப.மூர்த்தி, ஒசூர் மாவட்ட தொழிலாளர் அணித்தலைவர் சி.மணி, செயலாளர் தி.பாலகிருட்டினன், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா,நகர அமைப்பாளர் பூ. இராசேந்திரபாபு, கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் மாது, போச்சம்பள்ளி ஒன்றியத்தவர் கா.ஞானசேகரன், சி.பி.அய்(எம்) மாவட்ட குழு ஜி.கே.நஞ்சுண்டன், சுரேசு, தி.மு.க.,வி. சி.க. அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகளும் இறுதி மரியாதை செலுத்தினர்

No comments:
Post a Comment