புதுடில்லி, ஆக. 4- மூன்றாவது அலையை தவிர்க்க முடிந் தால், கார்கள் விற்பனை கணிசமாக மேம்படும் என, ‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.
மேலும், பல நாடு களை விட, இந்தியாவில் ஜி.எஸ்.டி., அதிகமாக இருப்பதால், காரின் தேவை குறைந்து வருவ தாகவும்; மத்திய - மாநில அரசுகள் தகுந்த நடவ டிக்கை எடுக்காவிட்டால், இந்த தொழில் குறிப் பிடத்தக்க வளர்ச்சியை அடைய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள் ளார். நிறுவனத்தின், 2020-2021ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை வெளி யிட்டு, பங்குதாரர்களுக் கான உரையில், ஆர்.சி. பார்கவா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: இரண் டாவது அலையால், முதல் காலாண்டில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. அடுத்து வரும் காலாண் டில், தடுப்பூசிகள் போடப் படுவதையும், மக்கள் பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்வதை யும் பொறுத்தே வளர்ச்சி இருக்கும். மூன்றாவது அலையை நாம் தவிர்க்க முடிந்தால் அல்லது அதன் விளைவை கணிசமாக குறைக்க முடிந்தால், கார் களின் விற்பனை, கடந்த ஆண்டைவிட கணிச மாக மேம்படும். ஒழுங்கு முறை விதிகளில் செய்யப் படும் மாற்றங்கள், ரூபா யின் மதிப்பு குறைதல், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் மாநில அரசுகள் விதிக் கும் வரிகள் போன்ற பல் வேறு காரணங்களால், நுகர்வோர் வாங்கும் செலவு அதிகரித்து உள் ளது. இதனால் காரின் தேவை குறைகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment