‘வோடபோன்’ பங்குகளை அரசுக்கு கொடுக்க தயார்: கே.எம்.பிர்லா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

‘வோடபோன்’ பங்குகளை அரசுக்கு கொடுக்க தயார்: கே.எம்.பிர்லா

புதுடில்லி, ஆக. 4- ‘ஆதித்யா பிர்லாகுழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, கடன் சுமையில் உள்ளவோடஃபோன் அய்டியாநிறுவனத்தில் உள்ள தன்னுடைய பங்குகளை, அரசுக்கோ அல்லது நிறுவனத்தை தொடர்ந்து செயல்படுத் துவதற்கு தகுதியானதாக அரசு கருதும் வேறு எந்த நிறுவனத்துக்கோ ஒப்படைக்க தயார் என தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம்கடந்த ஜூன் மாதம் இது குறித்த தன்னுடைய கருத்தை, அரசுக்கு அவர் கடிதம் வாயிலாக தெரிவித்துள் ளது, தற்போது தெரிய வந்துள்ளது. தொலை தொடர்பு உரிமத்துக் கான கட்டணம் மற்றும்ஸ்பெக்ட்ரம்எனும் அகண்ட அலைவரிசை பயன்பாட்டுக்கான கட் டணம் என, மொத்தம், 58 ஆயிரத்து 254 கோடி ரூபாயை, வோடஃபோன் அய்டியா நிறுவனம் அர சுக்கு செலுத்த வேண்டும். இதில், 7,854 கோடி ரூபாயை திருப்பி செலுத்தி உள்ள நிலையில், மீதி 50 ஆயி ரத்து, 400 கோடி ரூபாய் பாக்கி உள்ளது.

வரி பாக்கி குறித்த அரசின் கணக்கீட்டை சரிசெய்ய வேண்டும் எனக் கோரி, இந்நிறு வனம்ஏர்டெல்உடன், உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், இவற்றின் கோரிக்கையை நீதிமன் றம் ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில், தன்னு டைய பங்குகளை அரசி டம் வழங்க தயாராக இருப்பதாக, குமார் மங்க லம் பிர்லா தெரிவித்து உள்ளார்.அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், வோடபோன் அய்டியா நிறுவனத்தின் 27 சதவீத பங்குகள் தன்னிடம் இருப்பதாகவும், முதலீட் டாளர்கள் இந்நிறுவனத் தில் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு நிதி இதனால், 27 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட இந்நிறுவனத் தின் தன்னுடைய பங்கு களை அரசு, பொதுத் துறை, உள்நாட்டு நிதி நிறுவனம் அல்லது அரசு விரும்பும் எந்த நிறுவனத் திற்கும் கொடுக்க தயா ராக இருப்பதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.இது குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் தரப்பட்ட தாக தெரியவில்லை என்றார் அவர்.

No comments:

Post a Comment