தென்ஆப்பிரிக்க மேனாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

தென்ஆப்பிரிக்க மேனாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி

கேப்டவுன், ஆக. 8- தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகா மல் இருந்ததால் அவ ருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்ற ஜேக்கப் ஜுமாவுக்கு 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து கடந்த மாதம் முதல் வாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார். இதை கண்டித்து தென்ஆப்பிரிக்கா முழுவதும்அவரது ஆதரவாளர்கள் பெரிய அளவில் வன்முறைகளில் ஈடுபட்டனர். இதில் நூற் றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த நிலை யில் சிறையில் அடைக் கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா வுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச் சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து சிறை அதிகாரி சிங்கபாகோ நச்மாலோ கூறுகையில், ‘‘சிறையில் நடக்கும் வழக் கமான மருத்துவ பரி சோதனை ஜேக்கப் ஜூமாவை மருத்துவ மனையில் சேர்க்க தூண் டியது. சிறையில் முன் னாள் அதிபரின் மருத் துவ தேவைகளை பூர்த்தி செய்ய ராணுவ சுகாதார சேவையின் ஈடுபாடு தேவைப்படுகிறது’’ என கூறினார்.

அதேவேளையில் ஜேக்கப் ஜூமா உடலில் என்னமாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அவரின் தற்போதைய நிலை என்ன? என்கிற தகவல்கள் வெளியாக வில்லை.

No comments:

Post a Comment