லடாக், ஆக. 8- கிழக்கு லடாக் கின் கோக்ரா பகுதியி லிருந்து இந்திய, சீனப் படைகள் திரும்பியுள் ளன. கடந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக் எல்லை யின் பல்வேறு முனை களில் சீன வீரர்கள் அத்து மீறி நுழைய முயன்றனர்.
அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத் தினர். கடந்த ஜூன் 15ஆம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களி டையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீன தரப் பில் 45 வீரர்களும் உயிரி ழந்தனர்.
இதையடுத்து, கடந்த செப்டம்பரில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது லடாக் எல்லைப் பிரச்சி னைக்கு தீர்வு காண உடன் பாடுஎட்டப்பட் டது. இதன்பின் இரு நாடுகளின் ராணுவ உயர திகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர்.
அண்மையில் 12 ஆவது சுற்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. இருப்பினும், கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதில்எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது.
12ஆவது சுற்று பேச்சு சீனாவின் எல்லைக்குட் பட்ட மோல்டோ பகுதி யில் நடந்தது. ஒன்பது மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்தப் பேச்சு திருப்திகரமாக இருந்த தாக இருதரப்பும் தெரிவித்தன. 'கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்த படைகளை திரும் பப் பெற இருதரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
அதன்படி, அப்பகுதி யிலிருந்து இந்திய, சீனப் படைகள் திரும்பப் பெறப்பட்டன. வீரர்கள் தத்தம் நிரந்தர முகாம் களுக்குத் திரும்பினர்.
இந்திய சீன எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சர்ச்சைக்குரிய இடங் களில் இரு தரப்பிலும் தலா 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் படை வீரர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கோக் ராவிலிருந்து இந்திய, சீனப் படைகள் பின்வாங் கியுள்ளது எல்லைப் பிரச் சினையில் நல்லதொரு முன்னேற்றமாகப் பார்க் கப்படுகிறது.

No comments:
Post a Comment