ஆப்கானிஸ்தானின் அரசு ஊடக மய்யத் தலைவர் சுட்டுக் கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

ஆப்கானிஸ்தானின் அரசு ஊடக மய்யத் தலைவர் சுட்டுக் கொலை

காபூல், ஆக. 8- ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு ஊடக மய்யத்தின் இயக்குநராக இருந்து வந்தவர் தவா கான் மேனாபால். இவர் அரசாங்க செய்திக் குறிப்புகளை உள்ளூர் மற்றும் பன்னாட்டு ஊடகங் களுக்கு வழங்கி வந்தார். இந்நிலையில் அவரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக தலிபான் தீவிர வாத அமைப்பின் செய்தித் தொடர் பாளர் ஜபிபுல்லா முஜாஹித் கூறுகை யில், "மேனாபாலை நாங்கள் தான் சுட்டுக் கொன்றோம். அவர் எங்களுக்கு எதிராக அரசு வெளியிடும் செய்திகளை ஊடகங்களுக்குக் கொண்டு சேர்த்தார். அவருடைய செய்கைக்காக அவரை தண்டித்துள்ளோம்" என்று கூறினார். இருப்பினும், இந்தப் படுகொலை குறித்து மேலதிக விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

அண்மையில் தான், ஆப்கானிஸ் தானில் தலிபான் - பாதுகாப்புப் படை கள் இடையே நடந்த சண்டையில் இந் திய ஒளிப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் (ராய்ட்டர்ஸ் பத்திரி கையாளர்) உயிரிழந்தார்.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படை கள் வெளியேறி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளாக ஆப்கா னிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக் கப் படைகளும் வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான எல்லைப்புறப் பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அரசு சார் கட்டடங்களையும் தலிபான்கள் கைப் பற்றியுள்ளனர். இதன் காரணமாக ஆப் கன் - தலிபான்கள் இடையே கடுமை யான சண்டை நடக்கிறது. இதில் ஏரா ளமானோர் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment