ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

புதுடில்லி, ஆக. 8- ரிசர்வ் வங்கி, அதன் பணக் கொள்கை குழு கூட் டத்தின் முடிவில், 6.8.2021 அன்று முக்கிய மான பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ரெப்போவட்டி விகிதத்தை மாற்றாமல், தற்போதிருக்கும் 4 சதவீ தம் எனும் அதே நிலையை தொடர இருப்பதாக அறிவித்து உள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகன கடன் ஆகிய வற்றுக்கான வட்டியிலும் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. இதனால் இத்தகைய கடன் வாங்கி யவர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடலாம்.

மேலும், வங்கிகளின்டிபா சிட்டுகளுக்காக ரிசர்வ் வங்கி வழங்கும், ‘ரிவர்ஸ் ரெப்போவட்டி விகிதத்திலும் எந்த மாற்ற மும் செய்யப்படாமல், தற்போது நடை முறை யில் இருக்கும் 3.35 சத வீதம் என்ற நிலையே தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

பணக் கொள்கை முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டு, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கூறியதாவது: தனி நபர் களுக்கான வீட்டு வசதி மற்றும் வணிக ரீதி யான ரியல் எஸ்டேட் ஆகிய வற்றின் கடனுக்கான வட்டி விகித குறைப்பு, பொருளாதார வளர்ச் சிக்கு உதவு வதாக இருக் கும். ஏனெனில், இந்த இரு பிரிவுகளுமே அதிக ளவிலான வேலை வாய்ப் புகளை வழங்குகின் றன.

ரிசர்வ் வங்கி வட் டியை குறைத்ததை அடுத்து, வங்கிகளும் குறிப்பிடத் தக்க அளவில் வட்டியை குறைத்துள்ளன. கடன் சந்தையில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வீட்டுவசதி மற்றும் பெரிய தொழில்கள் ஆகி யவற்றுக்கான வட்டி விகித குறைப்பு பரிமாற் றம் வலுவாக இருக்கிறது. குறைந்த வட்டி விகிதம் கடன் சுமையை குறைக்க உதவியுள்ளது.

ஒன்றிய நிதியமைச்ச கம், முன் தேதியிட்ட வரு மான வரிச் சட்டப் பிரிவை நீக்கி, புதிய வருமான வரிச் சட்ட திருத்த மசோ தாவை தாக்கல் செய்துள் ளது, சரியான சமயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக் கையாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment