பாரத மிகுமின் தொழிற்சாலையிலிருந்து 2007 ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன் போன்ற ஏதும் இல்லாத காரணத்தால் 2013இல் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் தொழில்துறை நிலைக்குழு தலைவராக இருந்தபோது மேற்கொண்ட முயற்சியினால் ஆண்டுக்கு ரூ.10000 வழங்கப்பட்டு வந்தது. அந்த நிதி உதவி கடந்த மூன்றாண்டு காலமாக நிறுத்தப்பட்டு விட்டது. ஏற்கெனவே ஆதரவின்றி நலிந்த நிலையில் இருந்த அவர்களின் வாழ்க்கை நிலை கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் ஏதுமின்றி ஆதரவற்று பெருந்துயரில் அல்லாடும் நிலையிலிருந்து காத்திட மீண்டும் அந்த உதவித்தொகையை தந்திட ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அவர்களிடம் விளக்கிக் கூறி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் மனுவினை அளித்து விளக்கிக் கூறியவுடன் இந்த பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து ஆவன செய்வதாக உறுதி அளித்தார் ஒன்றிய அமைச்சர் என உடன்சென்ற ஓய்வுபெற்ற சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment