பா.ஜ.க. கூட்டணி கட்சியின் தலைவர் ஜிதன்ராம் மாஞ்சியும் வலியுறுத்தல்
பாட்னா, ஆக.6 பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகவி யலாளர்கள் வேவு பார்க்கப் பட்டதாக கூறப்படும் விவகாரத் தில் உச்ச நீதிமன்ற கண் காணிப்பின் கீழ் விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும் என்று முன்பு எதிர்க்கட்சிகள் மட்டுமே வலியுறுத்தி வந்தன.
தற்போது பாஜக கூட்டணியிலிருக்கும் கட்சிகளும் பெகாசஸ் விவகாரத்தை எழுப்ப ஆரம்பித் துள்ளன. “பெகாசஸ் மென் பொருள் மூலம் வேவு பார்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந் தால், அதுகுறித்து உரிய நட வடிக்கை மேற்கொள்ள நாடா ளுமன்றத்தில் இப்பிரச்சினை பற்றிவிவாதிக்கப்பட்டாக வேண்டும். விவாதம் மட்டுமல்ல; விசாரணை நடத்த வேண்டும்” என்ற கோரிக்கையை பீகார் முதல்வரும், அய்க்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் இரண்டுநாட்களுக்கு முன்பு பகிரங்கமாகவே செய்தி யாளர்கள் மத்தியில் கூறியிருந்தார்.இந்நிலையில், பீகார் மாநிலத்தின் மற்றொரு முன் னாள் முதல்வரும், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்துஸ் தானி அவாம் மோர்ச்சா-வின்தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சியும் பெகாசஸ் விவகாரத் தில் விசாரணையைக் கோரி யுள்ளார்.
“இந்த விவகாரத்தில் நாடா ளுமன்றம் பாதிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தால், பெகாசஸ் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். யார் வேவு பார்த்தார்கள் உள்பட உண்மைகளை கண்டறிய விசா ரணை மேற்கொள்ள வேண் டும்”என்று கூறியுள்ளார். பாஜகவுக்கு, அதன் கூட்டணிக் கட்சிகள் மத்தியிலிருந்தே நெருக்கடி உருவாக ஆரம்பித்துள்ளது.

No comments:
Post a Comment