எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அறிவுறுத்தல்
சென்னை, ஆக.6 மோசடி நபர்கள் சிலர், சமையல் எரிவாயு உருளையின் எரி வாயு சேமிக்கக் கூடிய கருவி மற்றும் உருளையின் எடை அழுத்தத்தைக் கண்டறிவ தற்கான கருவியை பொருத்தித் தருவதாகக் கூறி, போலி கருவி களை பொருத்தி அதிக பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளனர். எனவே, அவற்றை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத் துள்ளன.
இதுகுறித்து எண்ணெய் நிறு வன அதிகாரிகள் கூறியதாவது:
ரப்பர் குழாய் பரிசோதனை
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளைகளில் பொருத்தப்பட்டுள்ள ஆரஞ்சு நிற ரப்பர் குழாயை 5 ஆண்டு களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து, மாற்ற வேண்டும்.
அதேபோல, ரெகுலேட்டர் மற்றும் காஸ் அடுப்பு ஆகியவற் றையும் பரிசோதிக்க வேண்டும். பாதுகாப்பு கருதி இந்த நடை முறை மேற்கொள்ளப்படுகிறது.
இந்தப் பணியை வாடிக்கை யாளர்களின் முகவர்கள் மேற் கொள்வார்கள். அவர்கள் இப் பணியை மேற்கொள்ள வாடிக் கையாளர்களின் வீடுகளுக்கு செல்வதற்கு முன், அவர்கள் வரும் விவரத்தை சம்பந்தப்பட்ட முகமைகள், வாடிக்கையாளர் களுக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி மூலம் தகவல் அளித்து விடும்.
இவ்வாறு பரிசோதனைக்கு வரும் ஊழியர்களுக்கு அதிகபட்ச மாக ரூ.300 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும். கூடுதல் தொகையை அளிக்க வேண்டாம். அதேபோல, வரும் ஊழியர், சம் பந்தப்பட்ட முகமை அனுப் பும் ஊழியர்தானா அல்லது மோசடி நபர்களா என்பதை, முகாமைக்கு போன் செய்து வாடிக்கையாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
அதிக பணம் வசூல்
மேலும், சில மோசடி நபர்கள் உருளையில் எரிவாயு சேமிக்கக் கூடிய கருவி மற்றும் சிலிண்டரின் எடை அழுத்தத்தைக் கண்டறி வதற்கான கருவியைப் பொருத் தித் தருவதாகக் கூறி, போலி கருவிகளைப் பொருத்தி அதிக பணம் வசூலிக்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவற்றை நம்பியும் வாடிக்கையா ளர்கள் ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:
Post a Comment