பெங்களூரு,ஆக.6- கருநாடகாவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள் 29 பேர் நேற்று முன்தினம் (4.8.2021) அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
கருநாடக முதல்வர் எடியூரப்பா பதவி விலகிய பின், புதிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதவியேற்றார்.
எடியூரப்பா அமைச்சரவையில் துணை முதலமைச்சர்களாக இருந்த அசோக் கோவிந்த் கர்ஜோள், ஈஸ்வரப்பா, அஷ்வத் நாராயண், ஆகியோர் அமைச்சர்களாக பதவி யேற்றனர். பைரத்தி பசவராஜ், எம்டிபி நாகராஜ், சுதாகர், சோமண்ணா, உமேஷ் கத்தி என மொத்தம் 29 பேருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பசவராஜ் பொம்மை தலைமையிலான இந்த அமைச்சரவையில் லிங்காயத் வகுப்பைச் சேர்ந்த 8 பேருக்கும், ஒக்கலிகா வகுப்பைச் சேர்ந்த 7 பேருக்கும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 7 பேருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட் டுள்ளது. கடந்தமுறையைப் போலவே இம்முறையும் சசிகலா ஜொள்ளே என்ற பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மட்டும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
எடியூரப்பா முதல்வராக இருந்தபோது 3 பேருக்கு துணை முதல்வர் பதவி வழங் கப்பட்டது. இந்த முறை துணை முதல்வர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. இதனால் மேனாள் துணை முதல்வர்கள் ஈஸ்வரப்பா, அஷ்வத் நாராயணா, அசோக், கோவிந்த் கர்ஜோள் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கும் வாய்ப்பு வழங்காத தால் எடியூரப்பாவின் ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்துள் ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு காங்கிரஸ், மஜதவில் இருந்து பாஜகவுக்கு தாவிய 17 பேரில் பைரத்தி பசவராஜ், சுதாகர், முனி ரத்னா, எம்டிபி நாகராஜ் உள்ளிட்டோருக்கு மட்டுமே அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாஜக மூத்த சட்டமன்ற உறுப்பினர்-கள் நேரு ஒலெகர், ஆனந்த் மமணி, அரவிந்த் பெல்லத், சி.பி.யோகேஷ்வர் உள்ளிட்டோருக்கு பதவி கிடைக்காததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமைச்சரவையில் இடம் அளிக்காததை கண்டித்து அவர்களின் ஆதரவாளர் கள் கருநாடகாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் (4.8.2021)ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
No comments:
Post a Comment