சென்னை, ஆக.6 செவ்வாய் கோளி லிருந்து மார்ஸ் ரோவர் கருவி, பூமிக்கு அழகிய ஒளிப் படங்களை எடுத்து அனுப்பி யுள்ளது. தற்போது இந்த ஒளிப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வரு கின்றன.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமானநாசா, செவ் வாய் கோளுக்கு கடந்த ஆண்டு விண்கலத்தை அனுப் பியது. அந்த விண்கலமானது கடந்த பிப்ரவரியில் செவ்வாய் கோளுக்கு சென்ற டைந்தது. அந்த விண்கலத்திலிருந்து பிரிந்த பெர்சவரன்ஸ் ரோவர் கருவி செவ்வாயில் பத்திரமாக தரையிறங் கியது. சக்கரங் களைக் கொண்ட அந்தக் கருவி, செவ்வாய் கிரகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகிறது.
தற்போது நாசா விண்வெளி அமைப்பானது, தனது பெர்ச வரன்ஸ் ரோவரை, ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வா யின் மத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு ஆழமான பள்ளத்தில் தரையிறக்கியுள் ளது. பெர்சவரன்ஸ் ரோவர், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத் தின் பாறைகளைத் துளையிடுவது மற்றும்அக்கோளில் முன்பு உயிரி னங்கள் வாழ்ந்திருந்ததற் கான ஆதாரங்களைத் தேடும் பணியில் ஈடுபடும் என அப் போது அறிவிக்கப் பட்டது. அதன்படி தொடர்ந்து ஆய்வுகளை ரோவர் நடத்தி வருகிறது.
இந்நிலையில் பெர்சவ ரன்ஸ் ரோவர் கருவியானது செவ்வாயின் அழகிய ஒளிப் படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த ஒளிப் படங்கள் நாசாவுக்கு அண்மையில் கிடைத்துள்ளன. இதை `மெயில் ஃப்ரம் மார்ஸ் என்று நாசா விஞ்ஞானிகள் குறிப்பிடு கின்றனர். இந்த ஒளிப்படங்களை சமூக வலைதளங் களில் நாசா அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
அதுவும், செவ்வாய் கோளில் இருந்து உங்களுக்கு மெயில் வந்துள் ளது’ என்ற வாக்கியத்துடன் இது பதிவிடப்பட் டுள்ளது.
பெர்சவரன்ஸ் ரோவர் எடுத்த
3 ஒளிப்படங்களை நாசா வெளியிட் டுள்ளது. அதில் ஒன்றில், செவ்வாய் கோளின் தரைப்பரப்பில் சிவப்பு-பழுப்பு நிற அலை அலையான கோடுகள் தென்படுகின்றன. இவை அந்த கிரகத்தில் உண்டான அடுக் குப் பாறைகளாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர். இந்தப் படத்தில் செவ்வாய் கோளின் பள்ளத்துக்குள் அடுக்கு பாறை உருவாக்கத்தை அதன் பட்டைகள் மற்றும் படிக்கட்டுகள் போன்ற அடுக் குகளாக அரித்துச் சென்றிருப் பதைக் காட்டுகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..
மற்றொரு ஒளிப்படத்தில் வடக்கு வசந்த காலத்தில் ஒரு தனித் துவமான துருவ குன்று பகுதியில் எடுக்கப்பட்ட பரப்பு தெரிகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள் ளனர். மேலும் இந்த ஒளிப்பட மானது சில அருமையான வடிவங் களை வெளிப்படுத்துகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
3-ஆவதாக ஒரு ஒளிப்படத்தில் செவ்வாய் கோளின் தென் துருவத் தில் பனிக்கட் டிகள் பரவுகின்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந் நிலையில், இந்தப் ஒளிப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

No comments:
Post a Comment