ஒலிம்பிக் விளையாட்டுகளில் பதக்கம் வென்ற சிறிய நாடு என்ற பெருமையை சான் மாரினோ (San Marino) அண்மையில் பெற்றது.
33 வயது அலெஸ்ஸாண்ட்ரா பெரில்லி (Alessandra Perilli) டோக்கியோ 2020 ஒலிம்பிக் குறி பார்த்து சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். நாலா பக்கமும் இத்தாலியால் சூழப்பட்டுள்ள அந்தச் சின்னஞ்சிறிய நாட்டின் மக்கள்தொகை 33,860.
அதன் அகலமான பகுதியில், ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குக் காரில் செல்ல 25 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
பெர்முடா (Bermuda), ஒலிம்பிக் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற, நில அளவில் ஆகச் சிறிய பிரதேசம் என்ற பெருமையை டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பெற்றுள்ளது. 33 வயது ஃப்ளோரா டஃபி(Flora Duffy), பெண்கள் டிரையத்லான் போட்டியில் வெற்றி பெற்று அந்தச் சாதனையைப் புரிந்தார்.
அமெரிக்கக் கரைக்கு 640 மைல் தொலைவில் உள்ள அட்லாண்டிக் தீவு, பெர்முடா. அதன் மக்கள்தொகை 63,000 மட்டுமே. அதன் பரப்பளவு 20 சதுர மைல்.
தங்கப் பதக்கம் வென்ற
மிகச் சிறிய நாடுகள்
கிரெனடா (Grenada) - 2012 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் கிரணி ஜேம்ஸ் (Kirani James) ஆண்கள் 400 மீட்டர் ஓட்டம் நாட்டின் பரப்பளவு: 348.5 சதுர கிலோமீட்டர்
பஹாமாஸ் (The Bahamas) - 6 தங்கப் பதக்கங்கள்: படகோட்டம், திடல்தடப் போட்டி மக்கள்தொகை: 400,000க்கும் குறைவு
லிச்ட்டன்ஸ்டீன் (Liechtenstein) - 2 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் -1980 லேக் பிளசிட்,- ஹென்னி வென்ஸல், பனிச்சறுக்கு. -பரப்பளவு: 160 சதுர கிலோமீட்டர்
லக்ஸம்பர்க் (luxemborg) ஜோசப் பார்த்தெல், ஆண்கள் 1500 மீட்டர் ஓட்டம். - 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக். பரப்பளவு: 2,586 சதுர கிலோமீட்டர்
சுரினாம் (suriname) தென்னமெரிக்காவின் ஆகச்சிறிய நாடு - ஆன்டனி நெஸ்ட்டி anthony nesty), ஆண்கள் 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் 1988 ஒலிம்பிக். பரப்பளவு: 165,000 சதுர கிலோமீட்டர். -மக்கள் தொகை: சுமார் 575,990.

No comments:
Post a Comment