ஆதார் விவரங்கள்: தனி நபர்களுக்கு வழங்கக்கூடாது புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாம் : உயர்நீதிமன்றம் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

ஆதார் விவரங்கள்: தனி நபர்களுக்கு வழங்கக்கூடாது புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாம் : உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை, ஆக.5 ஆதார் விவரங்களை தனிநபர்களுக்கு வழங்கக்கூடாது. புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த வழக் குரைஞர் கணேசன், 2019-இல் காணாமல் போன தனது மகன் சண்முகபிரியனை கண்டுபிடித்து ஒப்படைக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வில் நேற்று (4.8.2021) விசாரணைக்கு வந்தது.

சிபிசிஅய்டி காவல்துறை சார்பில், மனுதாரரின் மகனின் ஆதார் விவரங்கள் கிடைக்கவில்லை. இதனால் சிறுவனை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய அரசுத் தரப்பில், ஆதார் விவரங்கள் தனிநபர் சம்பந்தப்பட்டவை. நீதிமன்றம் உத்தரவிட்டால் ஆதார் விவரங்களை வழங்கத் தயாராக உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ஆதார் விவரங்களை தனிநபர்களுக்குத் தான் வழங்கக்கூடாது. வழக்கு விசாரணைகளுக்கு உதவும் வகையில் புலன் விசாரணை அமைப்புகளுக்கு ஆதார் விவரங்களை வழங்கலாம் என்றனர். பின்னர், மனு தொடர்பாக ஆதார் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

No comments:

Post a Comment