லாலுபிரசாத் - முலாயம் சிங் டில்லியில் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

லாலுபிரசாத் - முலாயம் சிங் டில்லியில் சந்திப்பு

புதுடில்லி,ஆக.4- ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆஜேடி) தலைவர் லாலு பிரசாத், சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங்  ஆகியோர் டில்லியில் நேற்று முன்தினம் (2.8.2021) சந்தித்துப் பேசினர். முலாயம் சிங்  மகனும், சமாஜவாதி  கட்சியின் தலை வருமான அகிலேஷ் யாதவ் உடனிருந்தார்.

முன்னதாக, 2024 மக்களவைத் தேர்த லில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தேசியவாத காங் கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்

டோர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் டில்லிக்கு வந்த மம்தா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சரத் பவார், டில்லி முதல மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் மூத்த அரசியல் தலை வர்களான லாலு பிரசாத்-, முலாயம் சிங் சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள் ளது. இது தொடர்பாக டிவிட்டரில் லாலு வெளியிட்ட பதிவில், நாட்டின் மிக மூத்த சோஷலிச தலைவரான முலாயம் சிங்கை சந்தித்துப் பேசினேன்.

அவரது உடல் நலன் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டேன். நாட்டில் நிலவி வரும் விவசாயிகள் பிரச் சினை, அதிகரித்து வரும் வேலையின்மை, வறுமை, சமூக ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்துப் பேசினோம்.

இப்போது நாட்டுக்குத் தேவை சமத்து வமும் சம தர்மமும்தான்; முதலாளித்துவமும் மத வாதமும் தேவையில்லை என்று கூறி யுள்ளார்.

 

24 போலி பல்கலைகள்: ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி,ஆக.4- 'நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவ தாக யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு கண்டறிந்துள்ளது.

அவற்றின்  மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது' என மக்களவையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் 2.8.2021 அன்று ஒன்றிய கல்வி அமைச்சரும் பா..வைச் சேர்ந்த வருமான தர்மேந்திர பிரதான் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ள தாவது:

மாணவர், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் வந்த புகார்களின்படி நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதை யு.ஜி.சி. கண்டறிந்துள் ளது.

யு.ஜி.சி.யின் அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் இரண்டு பல்கலைக் கழகங்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத் தில் உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக எட்டு; டில்லியில் ஏழு; ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு:  புதுச்சேரி உட்பட அய்ந்து மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment