அப்போது அவர் நாட்டில் அறிவியல் சிந்தையை பரப்புவ தற்காக பல்வேறு பகுதிகளில் 4 அறிவியல் மய்யங் கள் அமைக்கப்படுவதாக கூறினார்.
அதன்படி தமிழ்நாட்டின் கன்னியா குமரி, மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர், ராஜஸ்தானின் அஜ்மீர், பீகானேர் ஆகிய இடங்களில் இந்த மய்யங்கள் அமைக்கப் படுவதாக கூறினார்.
இதற்கான ஒப்புதலை கலாச்சார அமைச்சகம் வழங்கி இருப்ப தாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சில் (என்.சி. எஸ்.எம்.), மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து 22 அறிவியல் மய்யங்கள் அமைத்துள்ள தாகவும், அவை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த அமைப்பின் கீழ் நாடு முழுவதும்
25 அறிவியல் அருங்காட்சியகங்கள் மற்றும் அறிவியல் மய்யங்கள்
இயங்கி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment