அவசர பயன்பாட்டுக்கு அனுமதி
புதுடில்லி, ஆக.8 கரோனாவுக்கு எதிராக, அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தாரின் ஒற்றை டோஸ் தடுப்பூசி இந்தியாவுக்கு வருகிறது. இந்த தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்காக ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது.
இதையொட்டி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆகஸ்டு 5ஆம் தேதியன்று, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தார், தங்களது ஒற்றை டோஸ் கரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். இந்திய மக்களுக்கும், எஞ்சிய உலக நாடுகளுக்கும், பயாலஜிக்கல் இ நிறுவனத்தாருடன் சேர்ந்து இந்த நிறுவனத்தின் ஒற்றை டோஸ் தடுப்பூசியைக்கொண்டு வருவதில் இது ஒரு முக்கிய மைல் கல் ஆகும். பயாலஜிக்கல் இ நிறுவனம், எங்களது உலகளாவிய வினியோக சங்கிலியில் முக்கிய அங்கம் வகிக்கும்; அரசாங்கங்கள், காவி, கோவேக்ஸ் அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படவும், தடுப்பூசியை வினியோகிக்கவும் உதவியாகத் திகழும். கரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவருவதில், எங்கள் தடுப்பூசியை துரிதமாக கிடைக்கச்செய்வதில் நாங்கள் இந்திய அரசுடனான எங்கள் பேச்சுவார்த்தையை முடிக்க காத்திருக்கிறோம் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தடுப்பூசிக்கு தற்போது ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.
No comments:
Post a Comment