காவல்துறை இயக்குநர் உத்தரவு
கோவை, ஆக.8 தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை யைத் தடுக்க, கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கேவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (ஆக 6) நடந்த ஆய்வுக்கூட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தர விட்டார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மேற்கு மண்டல காவல் துறை உயர் அதிகாரிகளுட னான ஆலோசனைக் கூட் டம் 6.8.2021 அன்று நடந்தது. தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், மேற்கு மண்டல மாவட்டங் களுக்கு உட்பட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்கள், தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங் கை பாதுகாக்க மேற் கொள்ளப்பட்டு வரும் நட வடிக்கைகள், குற்றங்களை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் போன்றவற்றை குறித்து எடுத்துக் கூறினர்.
அதைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் காவல் துறை இயக்குநர் சைலேந் திரபாபு பேசும்போது, கஞ்சா மற்றும் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்களின் புழக்கத்தையும், விற்பனை யையும், பயன்பாட்டை தடுக்க கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும். சமூகத்துக்கு கேடு விளைவிக்கும், குற்றங் கள் செய்யத் தூண்டும் மேற் கண்ட பொருட்கள் விற் பனை மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய சூழலில் வாகனப் போக்குவரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. என வே, மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்கள், மாநகர காவல் எல்லைகளில் சாலை விபத்து சம்பவங் களை தடுக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். சாலை போக்குவரத்து விதி களை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நட வடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகரக் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் தங்களது எல்லைக்குட் பட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவன பிரதிநிதிகள், குடியிருப்பு சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோ ருடன் கலந்து பேசி, பொது இடங்களில் சிசிடிவி கண் காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண் டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினரின் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
அதேபோல், நிலுவை யில் உள்ள வழக்குகளின் மீதான விசாரணையை தீவிரப் படுத்த வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment