அமைச்சர் அர.சக்கரபாணி உறுதி
ராணிப்பேட்டை மாவட் டம் ஆற்காடு தாளனூர் சாலை யில் உள்ள தனியார் அரிசி அரவை ஆலையில் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி 6.8.2021 அன்று ஆய்வு மேற் கொண்டார்.
அவருடன் கைத் தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், ஆற்காடு சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச் சர் அர.சக்கரபாணி கூறும் போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் எங்கள் துறை யின் முகவர்களாக 8 தனியார் அரிசி அரவை ஆலைகள் உள்ளன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப் படும் நெல்லை இவர்களிடம் வழங் கினால், அரிசியாக அரைத்து எங்களுக்கு வழங்கு வார்கள்.
உணவு பங்கீட்டுக் கடை களில் கருப்புப் பூஞ்சை கலந்த அரிசி இருப்பதாகப் பல இடங் களில் புகார்கள் வரப்பெற்றன. அதை அகற்ற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதை யடுத்து, எங்களின் முகவர் களான தனியார் அரிசி ஆலை நிர்வாகிகளை உடனடி யாக அழைத்து கலர் சார்டர் பொருத்த வேண்டும் என்றும் கூறியுள்ளோம். வரும் 20ஆம் தேதிக்குள் பொருத்துவதாக அவர்களும் உறுதி அளித்துள் ளனர்.
இந்த கலர் சார்டர்-அய் எல்லா ஆலைகளிலும் பொருத் தினால் கருப்புப் பூஞ்சை இல் லாத தரமான அரிசி கிடைக்கும். மக்களும் புகார் சொல்ல முடியாது. எங்கள் துறையில் 21 நவீன அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன.
இதில், 3 ஆலை களில் கலர் சார்டர் பொருத்த ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளோம். மீத முள்ள 18 ஆலைகளில் விரைவில் கலர் சார்டர் பொருத்த நட வடிக்கை எடுக்கப்படும்.
ராணிப்பேட்டை மாவட் டத்தில் கொள்முதல் செய்யப் படும் நெல்லைப் பாதுகாப்பாக வைக்கக் கிடங்கு வேண்டும் என்று மாவட்டத்தின் அமைச் சர் ஆர்.காந்தி கோரியுள்ளார். இந்த ஆண்டு இடம் தேர்வு செய்யும்படி மாவட்ட ஆட்சி யரிடம் கூறியுள்ளோம்.
ராணிப் பேட்டை மாவட்டம் கோடம் பாக்கம் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள 3 லட்சம் நெல் மூட்டைகளைப் பாது காப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
No comments:
Post a Comment