மதுரை, ஆக.8 தமிழ்நாட்டில் கரோனா ஊடரங்கையொட்டி 2020 மார்ச் முதல் பள்ளி, கல்லூரி களுக்குத் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்தபடி இணையதள வகுப்பு களில் மாணவ, மாணவிகள் பங்கேற் கின்றனர்.
எந்நேரமும் வீடுகளில் இருப்ப தால் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் ரீதியான சீண்டல்களும், தொல்லைகளும் அதிகரித்துள்ளன.
கரோனா ஊரடங்கைப் பயன் படுத்தி 18 வயது பூர்த்தியாகாத சிறுமிகளுக்குப் பெற்றோரே திரு மணம் செய்து வைப்பதும் கூடியுள் ளது. இதன்மூலம் பெண் குழந்தை களுக்கு எதிரான குற்றச் செயல் களைத் தடுக்கும் போக்சோ, குழந்தைகள் திருமணத் தடுப்பு வழக்குகள் அதிகரித்துள்ளன.
மதுரை நகரில் கடந்த 8 மாதத்தில் மட்டும் 65-க்கும் மேற்பட்ட போக் சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன்படி, மதுரை நகர், தெற்குவாசல் மகளிர் காவல் நிலையங்கள் மூலம் தலா 6 வழக்குகளும், தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் 15 வழக்குகளும், திருப்பரங்குன்றம் மகளிர் காவல்நிலையத்தில் 11 வழக்கு களும் பதிவாகியுள்ளன.
இதுதவிர மதுரை நகரிலுள்ள பிற சட்டம், ஒழுங்கு காவல் நிலை யங்கள் வாயிலாக 27 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரி யாகத் திருப்பரங்குன்றம், தல்லா குளம் காவல் நிலைய எல்லைகளில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகமாக நடந்தி ருப்பது தெரிகிறது.
அதேவேளையில் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைத்தது தொடர்பாக 8-க் கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி யுள்ளன.
மதுரை மாவட்டத்தில் திருமங் கலம் உட்கோட்டத்தில் 22 வழக்கு களும், மேலூர் உட்கோட்டத்தில் 9, உசிலம்பட்டி உட்கோட்டத்தில் 6, ஊமச்சிகுளம் உட்கோட்டக் காவல் நிலையங்களில் 9, சமயநல்லூர் உட்கோட்டத்தில் 14, பேரையூர் பகுதியில் 10 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாகத் திருமங்கலம் பகுதியில் 8 மாதத்தில் 22 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், புறநகரில் அதிகரித்து இருப்ப தாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment