சென்னை, ஆக.8 கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள தால், தமிழ்நாடு எல்லையோரப் பகுதி களில் கரோனாபரிசோதனை மற் றும் கண்காணிப்புபணிகள் மாநில சுகாதாரத் துறைமூலம் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இதே போல், கேரளாவில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், ஆலப்புழா உட்பட 7 விரைவு ரயில்களில் வரும் பயணிகளுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டாய ஆர்டி பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.இதேபோல் கன்னியா குமரி, தேனி,கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக அளவில் கேரளாவில் இருந்து வருகிறார்கள். அவர்களின் ஆதார், அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். கரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால், அவர்களுக்கு கரோனாபரிசோதனை கிடையாது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாநில சுகாதாரத் துறையினர், ரயில் நிலையங்களில் கரோனா பரிசோதனையை மேற்கொண்டு, பயணிகளின் விவரங் களை சேகரித்து வருகின்றனர்.
பரிசோதனையில் கரோனா பாதிப்பு உறுதியானால், அடுத்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை குறித்து சுகாதாரத் துறை ஆலோ சனை வழங்கி வருகிறது.
மற்றொரு புறம் ரயில்வேயின் அறிவுறுத்தல்படி, ரயில் நிலையங் களில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கை களை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

No comments:
Post a Comment