மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழாவில் தமிழர் தலைவரின் விளக்கவுரை
சென்னை, ஆக.7 பெண்கள், அடிமைகளாகவும் இருக் கிறார்கள்; அடிமைத்தனத்திலிருந்து விடுபடக் கூடாத வர்களாகவும் ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள். இதற்குப் போராடுவதுதான் முன்னுரிமை என்று தந்தை பெரியார் அவர்கள் நினைத்தார். அதுமட்டுமல்ல, பெரியார் அவர்களுடைய அந்த முயற்சி, அடிமைச் சங்கிலியை உடைத்து அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்பதுதான். விடுதலை என்று சொல்லும்பொழுது, எப்படிப்பட்ட உணர்வுகளை உண்டாக்கினார் என்றால், சமுதாய விஞ்ஞானத்தை உண்டாக்கினார். ஏனென்றால், அவர் சமூக விஞ்ஞானி. சுயமரியாதை இயக்கத் தத்துவமே சமூக விஞ்ஞானம்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .
மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு
கடந்த 31.7.2021 அன்று, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், திராவிடர் கழகத்தின் மகளிரணி, திராவிட மகளிர் பாசறையும் இணைந்து நடத்திய மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு - 1, வகுப்பு - 2 ஆகிய இரண்டு வகுப்புகளின் நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.
அவரது நிறைவுரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய சிறப்பு வாய்ந்த பயிற்சி முகாம் நிறைவு என்ற அளவில் அருமையான இந்நிகழ்ச்சி - தருமபுரி, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மண்டலங்களை சேர்த்து இன்றும், நாளையும் பிரித்து நடைபெறக்கூடிய இந்த வாய்ப்பில், முதலாவதாக நிறைவு விழா என்ற பெயரில் நடைபெறக்கூடிய இந் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய கழகத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் பொறியாளர் இன்பக்கனி அவர்களே,
மகளிரணி பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை அவர்களே, இந்நிகழ்வில் இணைப்புரை வழங்கிக் கொண்டி ருக்கக்கூடிய வழக்குரைஞர் தோழர் மதிவதனி அவர்களே, இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்வதற்குக் காரணமாக இருக்கக்கூடிய பொதுச்செயலாளர் அன்புராஜ், ஜெயக்குமார், துரைசந்திரசேகரன் ஆகிய நண்பர்களே,
அமைப்பாளர் குணசேகரன் அவர்களே, இந்நிகழ் வில் அற்புதமான ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கக் கூடிய அருமைத் தோழர்கள் கடலூர் மண்டல செயலாளர் ரமா பிரபா அவர்களே, இந்திரா காந்தி அவர்களே, அம்பிகா கணேசன் அவர்களே, காவியா அவர்களே, கவுதமி தமிழரசன் அவர்களே, வசுமதி அவர்களே, சத்யபிரபா, பிரியா, நித்யா பிரபு ஆகிய நண்பர்களே, மாநில அமைப்பாளர் கிருஷ்ணேசுவரி அவர்களே, மாவட்ட பொறுப்பாளர்களாக இருக்கக் கூடியவர்களே, மகளிரணி தோழர்களே,
மண்டல மகளிரணி செயலாளர் அவர்களே, ஈசுவரி சடகோபன் அவர்களே, முருகம்மாள் தருமபுரி, நளினி தருமபுரி, வசந்தி கிருஷ்ணகிரி, செல்வி செல்வம் ஓசூர், கண்மணி ஓசூர், அரியமணி மேட்டூர், ரவி மேட்டூர், அமிர்தம் சுகுமார் ஆத்தூர், ஜான்சி ராணி ஆத்தூர், தங்கம் தென்காசி மற்றும் ஜான்சி பொன்மலை தென்காசி, நந்திகுமார், கன்னியாகுமரி, இந்திரா மணி கன்னியாகுமரி, பானுமதி நெல்லை, ருத்ரா கார்த்திக், மற்றும் வால்டர் தெரசா, அரங்கநாயகி கிருஷ்ணசாமி, ரெஜினா பால்ராஜ் திருச்சி, சாந்தி சுரேஷ், ராஜா மணி, அம்பிகா, கமலம், சுஜாதா தமிழ்ச்செல்வம், ஜெயா, ஜெயா ஆழ்வார், கலைமணி பழனியப்பன், லதா, கவிதா திருப்பத்தூர், ஆனந்தி செங்கல்பட்டு, சென்னை செல்வி, முனியம் மாள், குணசுந்தரி, சுமதி, லட்சுமி, கோமதி, முனைவர் தமிழ்மொழி செய்யாறு ஆகிய தோழர்களே,
பயிற்சி வகுப்பு அறிக்கையை சிறப்பாக வாசித்த தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களே, தேன்மொழி, அவர் களே, தொடக்கவுரை நிகழ்த்திய பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநர் முனைவர் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களே, வாழ்த்துரை வழங்கிய கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே, கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே மற்றும் நன்றியுரை கூறவிருக் கின்ற அகிலா எழிலரசன் அவர்களே,
அருமைத் தோழர்களே, பயிற்சியாளர்களே, சிறப்பாக உரையாற்றிய மாணவப் பயிற்சியாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லையற்ற மகிழ்ச்சியோடு
உங்களை நான் சந்திக்கின்றேன்
எல்லையற்ற மகிழ்ச்சியோடு உங்களை நான் சந்திக் கின்றேன். காரணம், இது அடிப்படையிலே ஆணாதிக்க சமுதாயம். பெண்களால் முடியாது; பெண்கள் வரமாட் டார்கள்; பெண்கள் சினிமாவிற்குப் போவார்கள்; பெண் கள் தொலைக்காட்சியில் சீரியல் பார்ப்பார்கள்; இது போன்ற அறிவார்ந்த விஷயத்திற்கு வருவார்களா? என் கிற கேள்வி பல பேருக்கு, கேள்வியாகத்தான் இருக்கிறது.
ஆனால், வாய்ப்புக் கொடுத்து முயற்சி எடுத்தால், நம்முடைய களப்பணியாளர்களாக இருக்கக்கூடிய இருபால் தோழர்கள் - அதில், மகளிரால் முடியும் என்று காட்டக்கூடிய - தன்னால் முடியும் - பெண்ணால் முடியும் - அவர்கள் நினைத்தால் முடிக்காத காரியமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவில், களப் பணியையும் இணைத்து, தொழில்நுட்பப் பணியையும் இணைத்து மிக அருமையாக செய்து, முழு வெற்றியைப் பெற்ற உங்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அருமையாக செய்திருக்கிறீர்கள். இதனுடைய வெற்றியின் அடையாளம்தான் இங்கே பேசிய மாணவர் கள் அழகாகச் சொன்னார்கள். தொடர்ந்து இதுபோன்று நடத்துங்கள் என்று நண்பர்கள் சொல்கிறார்கள். நானும் அதை விரும்புகிறேன். அடிக்கடி நாம் இதுபோன்று செய்யவேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள், பிறந்த நாள் கொண் டாடுவதற்கு ஒரு விளக்கம் சொல்வார்.
பயன்படுத்தாத எந்த ஒரு கருவியும் துருப்பிடித்துவிடும்!
‘‘எனக்கு ஏன் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள்; பிறக்காத கடவுளுக்குப் பிறந்த நாள் கொண்டாடு கிறார்கள். சதுர்த்தி என்று சொல்கிறார்கள்; சஷ்டி என்று சொல்கிறார்கள்; நவமி என்று சொல்கிறார்கள். இப்படி எல்லா கடவுள்களுக்கும் சொல்கிறார்கள்.கடவுள் பிறக்கவில்லை என்று நன்றாக அவனுக்குத் தெரியும். விட்டால், மறந்துவிடுவார்கள்; நினைவு படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். பயன் படுத்தாத எந்த ஒரு கருவியும் துருப்பிடித்துவிடும் என்பதற்காக கடவுளுக்கு பிறந்த நாள் கொண் டாடுகிறார்கள்'' என்பார்.
அதுபோன்று, நாம் வாய்ப்புக் கொடுத்தால், உள்ளே இருக்கின்ற ஆற்றல் வெளியே வரும். நம்முடைய குடும்பத்துப் பிள்ளைகளைவிட, கொள்கைக் குடும்பத் திற்குப் புதிய வரவுகளாக வந்திருப்பவர்களை இருகரம் நீட்டி வரவேற்கிறோம்.
மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், வயது இடைவெளி என்பது அறவே இல்லை.
ஒரு பக்கம் மகளிர் பாசறை - இன்னொரு பக்கம் மகளிரணி.
மகளிரணிக்கும், மகளிர் பாசறைக்கும் வயது வித்தியாசம் இருக்கும்.
ஆனால், இங்கே பெரியாரியல் பயிற்சிக்கு சிறப்பு என்னவென்றால், மகளிரும் நடத்தினார்கள்; களப்பணி யோடு இணைத்தார்கள் என்பது சாதாரண பணியல்ல.
பள்ளிகளில் இடைநிற்றல் உண்டு; நம்முடைய வகுப்புகளில் இடைநிற்றல் கிடையாது!
குறுகிய காலத்தில் சிறப்பாகவும், உற்சாகத்தோடும் செய்தார்கள். பள்ளிக்கூடங்களில்கூட இடைநிற்றல் (ட்ராப்-அவுட்) உண்டு. ஆனால், நம்முடைய வகுப்பு களில் இடைநிற்றல் கிடையாது - தொடர் கற்றல்தான்.
இடைநிற்றல் அங்கே - தொடர் கற்றல் இங்கே.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான வாய்ப்பை இங்கே செய்திருக்கிறார்கள். இதையெல்லாம் உற்சாகப்படுத்து வதற்காகத்தான் பெரியார் பன்னாட்டமைப்பு - டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள், டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்கள் இன்னும் பலர் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
இத்தகைய அற்புதமான ஒரு செயல்திட்டம் என்பது சாதாரணமா?
மனிதனுக்கு மட்டும்தான் சுயமரியாதை!
தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்த வரையில், சுயமரியாதை இயக்கத்தை அய்யா அவர்கள் தொடங்கியபொழுது, ஒன்றை எளிதாகச் சொன்னார்கள்.
அதனுடைய முதல் குறிக்கோள் - இலக்கு என்ன?
பிறவி பேதம் அகற்றல்
மனிதநேயம், மானுடப்பற்று, மானுட இயக்கம், மனிதனுக்கு மட்டும்தான் சுயமரியாதை -
பிறவி பேதம் என்று சொல்கின்றபொழுது, ஜாதி - அதுதான் எல்லோருக்கும் பளிச்சென்று தெரிந்தது.
எல்லோரும் ஜாதி பேதம், சமத்துவமின்மை இவற்றைப்பற்றி சொன்னார்கள்.
ஆனால், அய்யா அவர்கள் விரிந்த பொருள் தந்தார். அவருடைய பார்வையில் இருந்து எதுவும் தப்பாது.
தந்தை பெரியார் என்கிற பகுத்தறிவுப் பகலவனின் வெளிச்சக் கதிர்கள் எல்லா இடங்களிலும் பாயும்.
பிறவி பேதம் என்பது உயர்ந்த ஜாதி- தாழ்ந்த ஜாதி என்பது மட்டுமல்ல; ஆண் உயர்ந்தவன் - பெண் தாழ்ந்தவள்.
பிறவி என்றாலே பேதம்.
ஆண் எஜமானன் - பெண் அடிமை
அடிமையாகவே இருப்பதற்காகவே கடவுளால் படைக்கப்பட்டவள் பெண்.
எல்லாவற்றிற்கும் சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும், சடங்குகளும் சங்கிலிகளாக நின்று கொண்டிருக்கின்றன!
நம்முடைய நாட்டில் எல்லாவற்றிற்கும் கடவுள் பயன்படும்; எல்லாவற்றிற்கும் மதம் பயன்படும்; எல்லா வற்றிற்கும் சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும், சடங் குகளும் சங்கிலிகளாக நின்று கொண்டிருக்கும். இவை எல்லாம் கட்டப்பட்டவை.
பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் இங்கே சுட்டிக் காட்டினார் - மனித குலத்தினுடைய விடுதலை என்பது இருக்கிறது - மனிதநேயத்தோடு பார்க்கும்பொழுது, பெரியார் அடிப்படையில், இந்த உலகம் இதுவரையில் காண முடியாத தலைசிறந்த மனிதாபிமானி.
அந்த மனிதநேய இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். இன்றைக்கு நாம் சிலரோடு போராடலாம்; நாளைக்கு அது மேலும் விரிவாகும் என்று சொன்னார்.
அது கருப்பு - வெள்ளை போராட்டமா?
ஆண் - பெண் போராட்டமா?
பேதம் எந்த ரூபத்தில் இருந்தாலும்,
கிராமம் - நகரம் என்கிற பேதம் இருந்தாலும்,
பேதமிலா பெருவாழ்வு - அந்த பேதமிலா பெரு வாழ்வை அடைவதற்குப் போராட்டம் நடத்துகின்ற நேரத்தில், பெண்கள்தான் அதிகமாகப் பாதிக்கப் பட்டார்கள்.
வாழ்நாள் முழுவதும் மீட்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்!
ஆண் - பெண் பேதத்தில்கூட, ஜாதிக்கொடுமை களைவிட, மிகவும் மோசம் என்னவென்றால், அடிமைகளாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் மீட்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
அதைவிட மிகவும் கொடுமை என்னவென்றால், அடிமையாக இருப்பதைவிட, அடிமைத் தளைகளை அதாவது கால்களில் போடப்பட்ட, கைகளில் போடப் பட்ட, மூளையில் போடப்பட்ட விலங்குகளைப் பொன் விலங்குகளாக நினைத்து, மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு - கோபப்படவேண்டிய நேரத்தில் - மகிழ்ச்சி யோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பேறு என்று கருதுகிறார்கள்.
ஆகவேதான், பேராசிரியர், கவிஞர், அருள்மொழி ஆகியோர் சுட்டிக்காட்டியபடி,
சமுதாயத்தில் சரி பகுதியாக இருக்கக்கூடிய மக்கள், அவர்களுடைய உரிமையைப் பெறவேண்டாமா?
அய்யா அவர்கள் ஏதோ ஒரு வெளிக் கோளில் இருந்து இறங்கியதுபோன்று, இந்த உலகத்தினுடைய ஆசாபாசங்களைத் தவிர்த்துப் பாடுபட்டு இருக்கிறார்கள்.
உலகில் வேறு எங்கேயாவது இத்தனை கோடி மக்கள் அடிமைகளாகவும், படிக்காதவர்களாகவும் இருப் பதை நியாயப்படுத்துகிறார்கள். உடலுழைப்புக்காரர் களாக இருப்பதை நியாயப்படுத்துகிறார்களா?
அடிமை சங்கிலியை உடைத்து
பெண்கள் விடுதலை அடையவேண்டும்!
பெண்கள், அடிமைகளாகவும் இருக்கிறார்கள்; அடிமைத்தனத்திலிருந்து விடுபடக் கூடாதவர்களாகவும் ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள்.
இதற்குப் போராடுவதுதான் முன்னுரிமை என்று தந்தை பெரியார் அவர்கள் நினைத்தார்.
அதுமட்டுமல்ல, பெரியார் அவர்களுடைய அந்த முயற்சி, அடிமை சங்கிலியை உடைத்து அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்பதுதான்.
விடுதலை என்று சொல்லும்பொழுது, எப்படிப்பட்ட உணர்வுகளை உண்டாக்கினார் என்றால், சமுதாய விஞ்ஞானத்தை உண்டாக்கினார்.
ஏனென்றால், அவர் சமூக விஞ்ஞானி. சுயமரியாதை இயக்கத் தத்துவமே சமூக விஞ்ஞானம்தான்.
தந்தை பெரியார் கேட்ட கேள்விகள் எல்லாம்
மனதை உருக்குகின்ற கேள்விகள்!
அப்படி வருகிறபொழுது, அய்யா அவர்கள் மிகத் தெளிவாக கேட்ட கேள்விகள் எல்லாம், மனதை உருக்கு கின்ற கேள்விகளாகும்.
அவர் எந்தப் புத்தகத்திலேயும் படிக்கவில்லை; எந்த நூலகத்திற்கும் போகவில்லை. தனியாக அமர்ந்து சிந்தித்து உருவாக்கியது இல்லை.
அன்றாடம் வாழ்க்கை முறையில், அக்கம் பக்கத்தில், அவருடைய நிகழ்வுகளில், அவர் பார்த்த அநீதிகள் - அந்த அநீதிகளைக் கண்டு அவர் கொதித்து எழுகிறார்.
அதுதான் மனிதனுக்கு இயல்பானது. ஆனால், நம்முடைய நாட்டில் மழுங்கிப்போய்விட்டது.
அநீதியைப் பார்த்தவுடன், பொங்கி எழக் கூடிய உணர்வே இல்லாத ஒரு சமுதாயமாக, மறத்துப்போன ஒரு சமுதாயமாக இருக்கிறது.
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் கருத்து!
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அடிக்கடி சொல்வதை நான் பல மேடைகளில் சொல்லியி ருக்கிறேன்.
‘‘தமிழன் விழுகிறான் என்பதைப்பற்றி எனக்குக் கவலைவில்லை. அடிக்கடி விழுகிறானே என்று நான் வருத்தப்படுவதைவிட, நேற்றைக்கு விழுந்த இடத்திலேயே இன்றைக்கும் விழுகிறானே - புதிய இடமாகப் பார்த்தாவது விழவேண்டாமா?'' என்று கேட்பார்.
நேற்று அந்த இடத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்தோம்; இன்றைக்கும் அதே பள்ளத்தில் விழுகிறானே!
இங்கே விழுந்தால்தான், நல்லது நடக்கும் என்று பின்னால் வருகிறவர்கள் ஒரு சடங்காகவே, சம்பிரதாயமாகவே அதனைத் தொடர்கிறார்கள்.
சடங்குகளும், சம்பிரதாயங்களும் இப்படி உருவானதுதான்.
இன்றைக்கு நாம் அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டியவர்களாக உள்ளோம்.
கவிஞர் அவர்கள் சொன்னாரே, பெரியார் அவர் களுடைய சிந்தனைப் புரட்சி எல்லையற்றது - விரிந்த வானம் போல.
ஆனால், அதை மறக்கிறார்கள்.
அஸ்திவாரம் பலமாக இருப்பதினால்தான் -
கோபுரம் உயர்ந்து நிற்கிறது
அஸ்திவாரம் பலமாக இருப்பதினால்தான், கோபுரம் உயர்ந்து நிற்கின்றது. ஆனால், கோபுரத்தை மட்டும் பார்த்து பலர் நினைக்கிறார்கள் - அதுபோன்று இன் றைக்கு, பாரதியார் கண்ட புரட்சிப் பெண் - புதுமைப் பெண் என்று சொல்கிறார்கள்.
அவர் நீண்ட நாள்களுக்கு முன்பு சொல்லியி ருக்கிறார். அவருடைய கருத்தை நாம் மறுக்கவில்லை. அவரை தவறாகச் சொல்லவில்லை. ஆனால், வெறு மென சொல்லிவிட்டுப் போவதோ, பாடிவிட்டுப் போவதோ, எழுதிவிட்டுப் போவதோ வேறு விஷயம்.
இராமலிங்க அடிகளார்கூட, அய்யாவிற்கு முன்பு, பல கருத்துகளைச் சொன்னார் - கடைசி காலத்தில் உணர்ந்தார்.
கடைவிரித்தோம் - கொள்வாரில்லை - கட்டி விட்டோம் என்றார்.
இப்பொழுது என்ன சொல்கிறார்கள், அதை அவரே சொல்லவில்லை என்று மறுக்கக்கூடிய அளவிற்கு, வாதாடக் கூடிய கட்டத்திற்கு வருகிறார்கள்.
இராமகிருஷ்ணா மிஷன்
உலகம் முழுவதும் போயிருக்கிறது -
இராமலிங்கா மிஷன் போயிருக்கிறதா?
இன்றைக்கு இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். வடக்கே இருக்கின்ற இராமகிருஷ்ணா மிஷன் என்பது எப்படி உலகம் முழுவதும் போயிருக்கிறதோ, அதுபோன்று இராமலிங்கா மிஷன் போயிருக்கிறதா?
காரணம் என்ன?
இருட்டடிப்பு!
அதேபோன்று பெரியாரை இருட்டடிப்பு செய்ய முடியவில்லை அவர்களால்.
காரணம் என்னவென்றால், பெரியாருடைய வெற் றிக்கு அடிப்படை என்னவென்றால், விஞ்ஞானம்.
விஞ்ஞானத்தை மறைக்க முடியாது. அந்த விஞ்ஞானத்தை தடுக்க முடியும், பல நேரங்களில்.
முதலில் அது அதிர்ச்சிக்குரியதாக எடுத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
அய்யா அவர்கள், ஒவ்வொன்றையும் எடுத்துச் சொல்லும்பொழுது, சரி பகுதி மக்களாக இருக்கக் கூடியவர்கள் இப்படி இருக்கிறார்களே!
சரி பகுதி மக்களுக்கு வெளிச்சம் இருந்தால்தானே நல்லது! ஒரு கண் மட்டும் இயங்கி, ஒரு காது மட்டும் கேட்டு, ஒரு கால் மட்டும் இயங்கி, ஒரு கை மட்டும் இயங்கினால், அது பக்கவாதம்தானே!
இதில் கொடுமை என்னவென்றால், ஜாதிக் கொடுமையைவிட, பிறக்கும்பொழுதே தடுப்பதில்லை, கருவில் உருவாகும்பொழுது தடுப்பதில்லை ஜாதியில்.
ஆனால், பெண்களுக்கு இருக்கும் கொடுமையை நினைத்துப் பார்த்தால், ரத்தக் கண்ணீர்தான்விட வேண்டும். பெரியார்தான் அதனை உணர்ந்தார்.
கருவில் உருவாவதற்குக்கூட உரிமையற்றவர்களாக இருக்கிறார்களே, என்னுடைய அருமைத் தோழர்கள்.
(தொடரும்)
சென்னை, ஆக.8 மற்றவர்கள் எல்லாம் பெண்கள் விடுதலையைப்பற்றி பாடினார்கள், பேசினார்கள், எழுதினார்கள்; காலத்தைக் காட்டி, அவர்களை முன்னோடிகள் என்றார்கள்; பெரியார் சொன்னதோடு நிற்கவில்லை; எழுதியதோடு தன் பணி முடிந்தது என்று கருதவில்லை. செயல்படுத்தினார். சமத்துவத்தைக் காட்டினார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .
மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு
கடந்த 31.7.2021 அன்று, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், திராவிடர் கழகத்தின் மகளிரணி, திராவிட மகளிர் பாசறையும் இணைந்து நடத்திய மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு - 1, வகுப்பு - 2 ஆகிய இரண்டு வகுப்புகளின் நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.
அவரது நிறைவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
தாய்மையினுடைய சிறப்பு, கற்பினுடைய பெருமை என்று நம் நாட்டில் பேசாதவர்களே கிடையாது.
ஆனால், நடைமுறையில் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்.
அய்யா மிக எளிமையாக இரண்டு விஷயங்களைக் கேட்கிறார்.
பெண் விடுதலையைப்பற்றி நாம் இவ்வளவு பெரிய புத்தகம் வெளியிட்டு இருக்கிறோம். இதைப்பற்றி பலப் பல இடங்களில் சொல்லியிருக்கிறோம்.
அய்யா அவர்கள், பெண்ணிய சிந்தனை, சமத் துவத்தைப்பற்றி சொல்லும்பொழுது,
செங்கற்பட்டு மாநாட்டுத் தீர்மானம்!
செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டில், ஆண் - பெண் பேதமில்லாத ஒரு வாழ்க்கை - பெண் ணுக்கு சம உரிமை வேண்டும்.
சொத்துரிமை - கல்வி உரிமை - உத்தியோக உரிமை - அது காவல்துறையாக இருந்தாலும், இராணுவத் துறையாக இருந்தாலும் என்று தீர்மானம் நிறைவேற்றி னார் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்பாக.
நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, தன்னுடைய வாழ்க் கையில் அதனை செயல்படுத்தியிருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள்.
நீங்கள் எல்லாம் ‘பெரியார்' திரைப்படம் பார்த்திருப் பீர்கள். அதில் ஒரு காட்சி வரும்.
‘‘பெண் ஏன் அடிமையானாள்?''
தன்னுடைய தங்கை மகள் அம்மாயிக்கு பால்ய விவாகம் செய்து வைக்கிறார்கள்; அந்த மணமகன் கால்ரா நோயினால் இறந்து போக, அந்த சிறு பெண் ணுக்கு விதவைக் கோலம் பூண முயற்சிக்கிறார்கள். அப்பொழுது அந்தப் பெண் தன்னுடைய தாய்மாமனான பெரியாரின் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுகிறார். அந்தக் குழந்தையைத் தூக்கி நிறுத்தும்பொழுதே - ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற நூலில் சொல்லியிருப்பார் - ‘‘நான் தூக்கி நிறுத்தும்பொழுதே, அதற்குப் புது வாழ்வு கொடுக்கவேண்டும் என்று தூக்கி நிறுத்தி னேன்'' என்று அழுத்தம் திருத்தமாக எழுதியிருப்பார்.
அதை வாழ்க்கையில் செய்து காட்டினார். எப்பொழுது?
110 ஆண்டுகளுக்கு முன்பு.
இன்றைக்குக்கூட சீர்திருத்தம் பேசுகிறவர்கள்கூட - ஆணாதிக்க சிந்தனை ஒரு பக்கம் உண்டு. விதவைத் திருமணம் என்றால் யோசிக்கிறார்கள்; மணவிலக்குப் பெற்றவர்கள் என்றால், அதைவிட யோசிக்கிறார்கள். ஏன்? இன்னும் அவர்கள் பக்குவப்படவில்லை.
ஆணினுடைய சுயநலம் இதில் அதிகமாக இருக் கிறது. இதையும் தாண்டி ஒருவர் சிந்தித்தார் என்றால், அதுதான் தந்தை பெரியார்.
அவர் சென்ற எல்லைக்கு யாரும் போகவில்லை.
பெண்களாக இருந்து அனுபவித்துப்
பார்த்தால்தான் தெரியும்!
1938 இல் அய்யா சொல்கிறார்,
‘‘பெண்கள் சுதந்திர விஷயமோ மோசமாக இருக்கின்றது; பெண்கள் விலை பொருள்களாகவே மதிக்கப்படுகின்றனர். குழந்தைப் பருவம், இளமைப் பருவம், கல்யாணப் பருவம், வாழ்க்கைப் பருவம், முதுமை ஆகிய எல்லா பருவங்களிலும், பெண்கள் அடிமைப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.
இவற்றைப் பற்றியெல்லாம் நான் சொல்வது, பழைமை விரும்பிகளுக்குக் கஷ்டமாகத் தோன்ற லாம்; அப்படிப்பட்டவர்கள் பெண்களாக இருந்து அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்'' என்றார்.
இந்த ஒரு வரியை நீங்கள் கொஞ்சம் விளக்கிப் பாருங்கள்.
சமுதாயத்தில் சரி பகுதியாக உள்ள பெண்கள் அடிமையாக இருந்தால், அந்த சமுதாயம் எப்படி முன்னேற்றம் அடைய முடியும்?
எனவே, பெண்கள் விடுதலை, பெண்கள் உரிமை, பெண்களின் சமத்துவம் என்பது, பெண்களுக்காக மட்டுமல்ல, மனித குலத்தினுடைய விடுதலைக்கே அது முக்கியமானது.
விரிந்த பார்வை - விசாலமான பார்வை -
விஞ்ஞான பார்வை!
பெரியாருடைய பார்வை - விரிந்த பார்வை - விசாலமான பார்வை - விஞ்ஞான பார்வை.
ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு - ணினீஜீணீtலீஹ் என்று. நான் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். கல்லூரி தோழர்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். இதுவரையில், பெரும்பாலான பயன் நடைமுறையில் ஷிஹ்னீஜீணீtலீஹ் என்றுதான் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், ணினீஜீணீtலீஹ் என்ற வார்த்தை புழக்கத்திலேயே வரவில்லை. ஏன் படித்தவர்களுக்குக்கூட ணினீஜீணீtலீஹ் என்ற வார்த்தை தெரியாது. ஷிஹ்னீஜீணீtலீஹ் என்ற வார்த்தை நிறைய பேருக்குத் தெரியும்.
எம்பதி என்றால் என்ன?
மி ணிஜ்ஜீக்ஷீமீss னீஹ் ஷிஹ்னீஜீணீtலீஹ் ஆனால், ணினீஜீணீtலீஹ் என்றால் என்ன?
இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
இதைப் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். இந்தக் காணொலி கூட்டத்திலும் சொல்கிறேன்.
ஒருவருக்கு ஒரு இழப்பு ஏற்படும்பொழுது நாம் அனுதாபப்படுவோம்.
அய்யோ அவருடைய கணவர், கரோனா தொற்றி னால் இறந்துவிட்டாரா? அனுதாபத்தைத் தெரிவிக் கிறோம் என்று சொல்வது இரங்கல் - சிம்பதி.
ஆனால், மிக நெருக்கமாக இருக்கக் கூடியவர்கள், பழகக் கூடியவர்கள் என்று சொல்லும்பொழுது, அவர் களுடைய துன்பத்தை அப்படியே உணர்ந்து, உணர்ந்து இருக்கக்கூடியது என்பது சாதாரணம், முதற்கட்டம்.
ஆனால், உண்மையில், எம்பதி என்றால் என்ன வென்றால், முழுக்க முழுக்க அவர்களாகவே மாறிவிடுவது. அவர்கள் அணிந்த காலணியை, ஒரு காலை விட்டு நடந்து செல்வது - அவர்களுடைய உணர்வு களாகவே மாறிவிடுவது.
நோயாளிகள் துன்பப்படுவதைப் பார்த்து இரங்குவது என்பது வேறு; நோயாளி இடத்தில் தன்னை வைத்துப் பார்ப்பது என்பது வேறு.
பெரியார் அவர்கள், மனித குலத்தைப் பார்த்து, அதிலும் அடிமைகளாக இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட வர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களை எப்படிப் பார்த்தார்களோ, அதைவிட கொடுமைகளை அனுபவிக்கக் கூடிய பெண்ணினத்திற்கு விடுதலை வேண்டும் என்று பாடுபட்டார்கள்.
எம்பதி என்பதற்குத் தமிழ்ச் சொல் என்னவென்றால், ஒத்தறிவு என்று நாம்தான் உருவாக்கினோம்.
திருக்குறளில்கூட அந்த வார்த்தை இருக்கிறது.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்.
பட்டறிவு, பகுத்தறிவு போன்று, நாமே உருவாக்கிய சொல் ஒத்தறிவு.
துன்பப்படுபவரைப்போலவே மாறிவிடுவது.
னள்ளுவருடைய மனிதாபிமானம் உயர்ந்தது
ஒத்தது அறிவான் என்பதிலிருந்துதான் அந்தச் சொல்லை எடுத்தோம்.
ஒத்தறிவு - ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் -
அப்படி இல்லாதவன் யார் என்றால், வள்ளுவருடைய மனிதாபிமானம் உயர்ந்தது.
மற்றோர் செத்தாருள் வைக்கப்படுவர்
உயிரோடு இருந்தால்கூட, அவர்கள் செத்துப்போன வர்களின் கணக்கில்தான் வருவார்கள். அவர்களை மனிதன் என்று சொல்வது இல்லை.
மனிதன் என்று சொன்னால், மற்றவர்களுடைய துன்பத்திற்கு இரங்கினால் மட்டும் போதாது; துன்பத்தைக் களைவதில், மற்றவர்களாக ஆகிவிடுவதுதான். அந்த இடத்திலே தன்னை நிறுத்திக் கொண்டார் பெரியார் அவர்கள்.
பெண்களைப் பாருங்கள், அவர்களை அடக்கி வைத்திருக்கிறீர்களே என்றார்.
தன்னுடைய சகோதரி மகள் என்று மட்டும் அவர் அன்றைக்குச் சொல்லவில்லை.
அந்த சிந்தனை, துணிச்சல் இன்றைக்கு எவ்வளவு வந்திருக்கிறது; எத்தனை தலைமுறை வந்திருக்கிறது?
பெரியார் சொன்னதோடு முடிந்தது என்று கருதவில்லை -
அவற்றை செயல்படுத்தினார்!
மற்றவர்கள் எல்லாம் பெண்கள் விடு தலையைப்பற்றி பாடினார்கள், பேசினார்கள், எழுதினார்கள்; காலத்தைக் காட்டி, அவர்களை முன்னோடிகள் என்றார்கள்; பெரியார் சொன்ன தோடு நிற்கவில்லை; எழுதியதோடு தன் பணி முடிந்தது என்று கருதவில்லை. செயல்படுத்தினார். சமத்துவத்தைக் காட்டினார்; அந்தப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. குடும்பத்திலே அவர் எதிர்நீச்சல் அடித்துத்தான், பொதுவாழ்க்கைக்கு வந்து, சமூகத்திலும் எதிர் நீச்சல் அடித்து வந்தார்.
இப்படிப்பட்ட ஒரு தலைவரைப் பார்க்க முடியுமா?
இப்படிப்பட்ட கொள்கை எவ்வளவு பெரிய மானுடத்தினுடைய உச்சம்.
மானிடத்தினுடைய மிகப்பெரிய ஒரு மலர்ச்சி. அதையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா?
மனிதனை மனிதனாக்குவது என்பதுதான்!
ஆகவேதான், பெண்ணுரிமை என்பது, அது ஏதோ உரிமை, அதைப்பற்றி பேசுகிறார்கள்; அது என்னங்க, என்று அலட்சியமாகப் பேசுவது என்பது இருக்கிறதே - மனிதாபிமானம் - மானுடப்பற்று.
ஏனென்றால், ஒரு மனிதனுக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம்; ஆனால், அவனை மனிதனாக்குவது என்பது அவ்வளவு சுலபமல்ல.
நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும். திருமண மானவர்கள் நம்மில் நிறைய பேர் இருக்கிறோம். நம்முடைய வாழ்விணையரிடம் இதை நூற்றுக்கு நூறு கடைபிடிக்கின்றோமோ? இந்தக் கேள்விக்குத் தெளிவான பதில் உண்டா? சிக்கல்தான்.
ஏனென்றால், நான் சுயநலக்காரன் - என்னுடைய வாழ்விணையர் நல்ல வேலைக்காரியாக இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும். என்னை அறியாமல், அந்த ஆதிக்கத்தனம் - நான் இதுவரை சமையல் அறைக்குள் செல்லவில்லையே! இதுதான் வாழ்க்கை முறை.
இதை தந்தை பெரியார் விருப்பு, வெறுப்பில்லாமல் பார்த்தார்.
ஆகவேதான், ஒரே வார்த்தையில் சொன்னார், பெண்களாக இருந்து அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்; அவர்களுடைய கஷ்டத்தை அனுபவியுங்கள் என்றார்.
அதுமட்டுமல்ல, பிறப்பதற்குக்கூட சுதந்திரம் இல்லை என்பது மட்டுமல்ல, குழந்தை பருவம், இளமைப் பருவம், கல்யாணப் பருவம், வாழ்க்கைப் பருவம், முதுமைப் பருவம் எல்லா பருவத்திலும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள்.
அதை மாற்றிக் காட்டினார் பெரியார் அவர்கள்.
பெண்களுக்குப் படிப்பைக் கொடு; சுதந்திரத்தைக் கொடு.
சரி, பெண்களுக்கு படிப்பையும், சுதந்திரத்தையும் கொடுத்தால் மட்டும் போதுமா?
அவர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும்.
சமத்துவம் - சொத்துரிமை கொடுக்கவேண்டும் அவர்களுக்கு.
இவ்வளவு இருந்தாலும், இன்னமும் ஆண் எஜமானன்தான்; அடிப்படையில் இது ஆணாதிக்க சமுதாயம்தான்.
ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் பெரியார் நுழைந்தால்தான்,
இன்ப வாழ்வு வாழலாம்!
முழுக்க பெரியாரியம் உள்ளே நுழைந்தால்தான், அது வேலை செய்தால்தான், அதனுடைய கருத்து வீச்சு உலகளாவிய அளவில் பரவினால்தான், ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் பெரியார் நுழைந்தால்தான், இன்ப வாழ்வு வாழலாம்.
இன்ப வாழ்வு - இப்பொழுது இருப்பது துன்ப வாழ்வுதான். பல நேரங்களில் துன்ப வாழ்விற்கு என்ன அடிப்படை?
அந்த எஜமானத்தனம்தானே!
பெண்கள் அடிமையாக இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்புதானே!
படித்த பிறகு, பக்குவம் பெற்ற பிறகு, பகுத்தறிவு சிந்தனைக்கு ஆளான பிறகு, பெண்கள் அவ்வளவு சுலபமாக அடிமைகளாக இருப்பார்களா?
அப்பொழுது அவர்கள் எதிர்த்து நிற்கிறபொழுது, கொஞ்சம் மாறுபடுகிறபொழுது,
ஆ, என்னையா எதிர்க்கிறாய்? என்று நினைக்கக் கூடிய அளவிற்கு இருப்பார்கள் ஆண்கள்.
பெரியார்தான் கேட்டார்,
பெண்கள் அடிமையானது மட்டுமல்ல, உடல்மீது அவர்களுக்கு உரிமை இருக்கிறதா?
பெண்ணடிமையைப் போக்குவதைப்பற்றி மட்டும் பேசிவிட்டு செல்லவில்லை. இதோ சுயமரியாதைத் திருமணம் - இரண்டு பேரும் நண்பர்கள். ஒருவர் எஜமானன் - இன்னொருவர் அடிமையல்ல.
இரண்டு பேரும் நண்பர்கள்.
வைதீகத் திருமணத்தில் இப்படியா?
கன்னிகாதானம் என்று சொல்லி தானம் கொடுப்பது; பொருள்களைத்தான் தானம் கொடுப்பார்கள்; மனிதனை தானம் கொடுப்பார்களா?
மனிதம் இல்லை அந்த இடத்தில்.
தத்துவத்தில், சமத்துவத்தில், சம வாய்ப்பில் அவர்கள் மனிதர்களாக இல்லை!
ஆகவேதான், பெரியாருடைய தத்துவம், பெண் ணுரிமை என்பது மட்டுமல்ல - மனிதர்களை மனிதர் களாக்குவது; மனிதர்கள் மனிதர்களாக்கப்பட வேண்டும். உருவில் மனிதன்; தத்துவத்தில், சமத்துவத்தில், சம வாய்ப்பில் அவர்கள் மனிதர்களாக இல்லை.
அதைக் கண்டு பெரியார் நொந்து போனார்; அதைக் கண்டு ஆத்திரப்பட்டார். மேலும், அதைக் கண்டு கொதித்துப் போனார். அநியாயமாக இருக்கிறதே, இது என்ன கொடுமை? அதை ஏற்கலாமா? என்று கேட்டார்.
அதுமட்டுமல்ல, ஏற்க முடியாதவர்களுக்கு, எளிமையாக ஏற்றுக்கொள்வது எப்படி என்பதற்கு, அழகாக ஒரு கருத்தை சொல்கிறார் பாருங்கள்.
பெரியாருடைய புரட்சிகரமான சிந்தனை - எவ்வளவு மென்மையான வழிமுறையின்மூலம் அதைப் புகுத்துவதற்குத் தயாராக இருந்தார்.
கடுமையான கருத்துகளும் இருக்கின்றன; ஆனால், மென்மையாக சொல்லக்கூடிய கருத்தை சொன்னார்.
பெண்களுக்கு உரிமை கொடுக்கும்பொழுது ஆண்களே உங்கள் மகளை நினைத்துக் கொள்ளுங்கள்!
ஆண்களே, பெண்களுக்கு உரிமை கொடுக்கும் பொழுது, உங்களுடைய மனைவியை நினைக்காதீர்கள்; ஏனென்றால், நீங்கள் எஜமானன்; அனுபவித்துக் கொண்டே இருக்கிறீர்கள். தயவு செய்து உங்களுடைய மகளை நினைத்துக்கொண்டு இந்தப் பிரச்சினையைப் பாருங்கள்.
எல்லோரும் தன்னுடைய மகள் நன்றாக இருக்க வேண்டும்; சுதந்திரமாக இருக்கவேண்டும் என்றுதானே நினைப்பார்கள்.
உங்கள் தாயை நினைத்துக்கொண்டு பாருங்கள்; என்னுடைய தாய் இப்படி குடிகார அப்பனிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறாரே என்று நினைத்துப் பாருங்கள்; இதுபோன்ற ஊதாரித்தனமான பேர்வழியை, கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று நினைக்கிறார்களே!
பெரியார் சொல்கிறார்,
உங்கள் தாயை நினைத்துக்கொண்டு பாருங்கள், உங்களுடைய தங்கையை நினைத்துக் கொண்டு பாருங்கள் என்றார்.
அய்யோ, என் தங்கையை நான் ஒருவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தேன். அவன் திருட்டுப் பயலாக இருக்கிறானே - மிகவும் மோசமானவனாக இருக்கிறானே - என்ன சொன்னாலும் திருந்தாதவனாக இருக்கிறானோ என்று நினைக்கிறார்கள்.
அதே சமயம், மனைவி என்று வரும்பொழுது, இவன் நூற்றுக்கு நூறு அனுபவிக்கிறானே - நான் அடிக்கடி மணவிழாக்களில் சொல்கிற உதாரணத்தை இங்கேயும் சொல்கிறேன்.
மகன், மகளுக்குத் திருமணம் செய்து விட்டீர்கள். உங்களுக்கு இனி நிம்மதிதான் என்று கேட்டுவிட்டு, சரி, மகள் எப்படி இருக்கிறாள்? என்று கேட்டால்,
நல்ல மருமகன் அவர். என்னுடைய மகள் என்ன சொல்கிறாளே, அவள் கிழித்த கோட்டை தாண்டாமல், அமைதியாக இருக்கிறார் என்று சொல்கிறார்.
சரி, உங்களுடைய மருமகள் எப்படி இருக்கிறாள்? என்று கேட்டவுடன்,
ஆமாம், அதை ஏன் கேட்கிறீங்க; எனக்கு என்று வந்து வாய்த்தாளே என்று சலிப்புடன் சொல்கிறார்.
ஒரே சிந்தனை - ஒரே நோக்கு -
அதுமட்டுமல்ல, பெண் குழந்தை பிறப்பதற்கே மிகப்பெரிய கொடுமை!
ஆகவேதான், பெண்ணுக்குப் பிறக்க உரிமையில்லை - வாழ உரிமையில்லை - படிக்க உரிமையில்லை - சொத்துரிமை இல்லை.
இன்றைக்கு சட்டங்கள் வந்திருக்கின்றன என்று நீங்கள் சொல்லலாம்.
சட்டங்கள் வந்திருக்கின்றன - சட்டங்கள் எங்கே இருக்கின்றன? புத்தகத்தில் இருக்கின்றன. அது நடைமுறைக்கு வந்ததா? என்றால், இல்லை.
நாம் போகவேண்டிய தூரங்கள்
நிறைய இருக்கின்றன!
எனவேதான், நாம் போகவேண்டிய தூரங்கள் நிறைய இருக்கின்றன.
திருமணம் முடிந்தவுடன், எத்தனை குழந்தை என்ற கேள்வியைத்தான் எல்லோரும் கேட்பார்கள். அந்த உரிமை யாருக்கு?
அடுத்தாக பெரியார் ஒரு கேள்வி கேட்டார்,
திருமண அழைப்பிதழில் என்ன அச்சடிக்கிறார்கள் என்றால், ‘‘பெரியோர்களால் நிச்சயித்தபடி'' என்று.
ஏண்டா, பெரியோர்களால் நிச்சயித்தபடி என்றால், இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் அவர்களுக்குத்தான் உரிமையே தவிர, பெரியோர்களுக்கு என்ன வேலை?
‘‘எங்களால் நிச்சயித்தபடி, நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டபடி என்று போடுங்கள்'' என்றார்.
அதுதான் வாழ்க்கை - அதுதான் சமத்துவம் - அதுதான் வாய்ப்பு என்று மிகத் தெளிவாக சொன்னார்.
ஆகவே நண்பர்களே, இது ஒரு பகுதி -
இன்றும் தேவைப்படுவார் - நாளைக்கும் தேவைப்படுவார் -என்றைக்கும் தேவைப்படுவார்!
எனவே, சம உரிமைகளைப்பற்றி பேசக்கூடிய உணர்வுகளை உருவாக்கி, அதிகாரத்திற்குரிய சட்டங்களுக்காகப் போராடி வெற்றி பெற்று செயல்படுகின்ற கட்டத்தில், எப்படி வந்திருக்கிறார் என்று சொல்லும்பொழுது, இனிமேல்தான் பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார். இன்றும் தேவைப்படுவார் - நாளைக்கும் தேவைப்படுவார் -என்றைக்கும் தேவைப்படுவார்.
எனவேதான், அருமை மாணவச் செல்வங்களே, நீங்கள் வயது இடைவெளி இல்லாமல் வந்திருக்கிறீர்கள். பெரியார்தான் மிகப்பெரிய ஓர் ஆயுதம் - ஒரு பாதுகாப்பு அரண்.
சமத்துவத்தை நிறுவியவர் அவர்தான்.
பெரியார் அவர்கள் புல்டோசர் மாதிரி - சமுதாயத்தை சமமாக்குவதற்குக் கஷ்டப்பட்டு இருக்கிறார்!
புல்டோசர் எப்படி எல்லாவற்றையும் இடித்து, சமமாக நிரவுகிறதோ, அதுபோன்று பெரியார் அவர்கள் புல்டோசர் மாதிரி. சமுதாயத்தை சமமாக்குவதற்குக் கஷ்டப்பட்டு இருக்கிறார்.
யாருக்காக?
மனிதநேயத்திற்காக என்பதை மறந்துவிடாதீர்கள்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:
Post a Comment