செனட்சபை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம்-க்கு மீண்டும் கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

செனட்சபை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம்-க்கு மீண்டும் கரோனா

வாசிங்டன், ஆக. 5- அமெரிக்கா வின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்சபை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் கரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்ட நிலையில், தற்போது அவர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த சனிக்கிழமை இரவு நடந்த விருந் தில் அவருடன் குறைந்தது ஏழு அமெரிக்க செனட்சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா தாக்கிய 2 வாரத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து: ஆய்வில் தகவல்

லண்டன், ஆக. 5- கரோனா வைரஸ் தொற்று ஒருவரைத் தாக்கிய முதல் 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகதி லேன்செட்பத்திரிகையில் ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றிய ஆய்வை நடத்திய சுவீடன் நாட்டின் உமேயா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஒஸ் வால்டோ பொன்சேகா ரோட்ரிக்ஸ் கூறும்போது, “கரோனா வைரஸ் தொற்று தாக்கிய முதல் 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் ஆபத்து 3 மடங்கு அதிகரித்து இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்என தெரிவித்தார்.

மற்றொரு ஆராய்ச்சியாளரான காட்சூலாரிஸ், “கரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியம் என்பதை எங்கள் முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக கடுமையான இதய பாதிப்பு ஆபத்தில் இருக் கிற முதியவர்கள் தடுப்பூசி போடுவது முக்கியம்என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment