ஒசூரில் பெரியார் தொண்டர்கள் படத்திறப்பு - பெரியாரியல் பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

ஒசூரில் பெரியார் தொண்டர்கள் படத்திறப்பு - பெரியாரியல் பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு

ஒசூர், ஆக. 4- ஒசூரில் பெரியார் தொண்டர்கள் படத் திறப்பு, பல் துறையில் சிறந்த இளையோர்க்கு, பெரி யாரியல் பயிற்சி மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் தோழர் வசந்தசந்திரன் அலுவலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி வரவேற்றார்.அதனை தொடர்ந்து பெரியார் சுப்பிரமணி (ஒசூர் நகர .. தலைவர்)அவர்களின் படத்தை மாநில அமைப்பு செய லாளர் ஊமைஜெயராமனும்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இயமயவரம்பன் தந்தையார் விஜய மாயாண்டி அவர்களின் படத்தினை மாநில அமைப் பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரனும் திறந்து வைத் தனர். மாநில ..துணைத் தலைவர் அண்ணா சரவ ணன், பொதுக்குழுஉறுப்பினர் .செ.செல்வம், மாவட்ட ..செயலாளர் சிவந்தி அருணாசலம்,மாவட்ட மகளி ரணி தலைவர் செ.செல்வி, செயலாளர் லதாமணி,நகர தலைவர் கார்த்திக்,விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர துணைச்செயலாளர் மு.ராசகோபால் ஆகியோர் நினை வேந்தல் உரையாற்றினர். அதனை தொடர்ந்து ஒசூர் மேனாள் நகர செயலாளர் செல்லதுரை அவர் களின் அன்பு மகன் மருத்துவ படிப்பை ரஷ்யாவில் முடித்து தாயகம் திரும்பினார்.  மருத்துவர் வா.செ.தமிழ்வாணன். ஓவியத்தில் சிறந்து விளங்கும் தோழர் சிவாசுப்பையா அவர்களின் அன்பு மகன் வம்சிக் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்களைமுதல மைச்சர் முதல் கையெழுத்துஎன்ற தலைப்பில் முதல மைச்சர் ஓவியத்தை வரைந்து அதை ஏலம் விட்டு அதில் வந்த பணத்தை (50,000)  முதல்வர் பொது நிவாரண நிதியாக நேரில் சென்று வழங்கினார். முதல மைச்சர் நேரில் அழைத்து பாராட்டினார்.

ஜாதிமறுப்பு மணம்புரிந்த மணமக்களுக்கு பாராட்டு

கல்விக்காக ஓவியம் என்று தொலைநோக்குடன் பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறார்.மாவட்ட மகளிரணி செயலாளர் லதா மணி - மாவட்ட தொழிலா ளர் அணி தலைவர் சி.மணி இணையர்களின் அன்பு மகள் ..நன்மதி சிலம்பாட்டம் சிறப்பாக கற்றுத் தேர்ந்து வருகிறார். ஒசூர் நகர்மன்ற மேனாள் தலைவர் குருசாமி அவர்களின் அன்பு மகன் விக்கிப்பீடியா இணையத்தில் 2014 முதல் 40000 புது கட்டுரைகளையும், ஏறக்குறைய இருபதாயிரம் பக்கங்களில் அய்ம்பதாயிரம் தொகுப்புகளையும் செய்துள்ளார். ஜாதி மறுப்பு இணை யர்கள் சீனிவாசன்,ஆஷா ஆகியோர் இணையேற்பு நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களில் தொலைக்காட்சி ஊடகங்களில் சிறப்பாக பேசப்பட்டது. எந்தவித மூடச்சடங்குமின்றி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு மாலை மாற்றிக் கொண்டு மிக எளிய முறையில் இணையேற்பை நடத்திக் கொண்டனர். நடந்து முடிந்த பெரியாரியல் பயிற்சியில் பங்கேற்று தருமபுரி மண்டல அளவில் முதல்பரிசு பெற்ற கவுதம், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

அதே போன்று பெரியாரியல் பயிற்சியில் பங்கேற்ற .திலீபன்,கா.பிரனேஸ்,.தருன்,.கர்ஷினி,வா.செ.மதி வாணன் ஆகியோர்க்கு மாநில அமைப்பாளர் ஒரத்த நாடு இரா.குணசேகரன், மாநில அமைப்பு செயலாளர் ஊமைசெயராமன், மாநில ..துணைத் தலைவர் அண்ணாசரவணன், மாநில மாணவர் கழக அமைப் பாளர் செந்தூரபாண்டி பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்கள்.

பெரியார் பிஞ்சு இதழ் சந்தாக்கள்

மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் 25 ஆண்டு சந்தாக்கள், பொதுக்குழு உறுப்பினர் .செ.செல்வம் 6, மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி 5, நகர துணை தலை வர் சின்னராசு 5, ..மாவட்ட துணைத் தலைவர் ரராமேஸ்வரன் 5, பைரவி வம்சிக் 2, நகர தலைவர் கார்த் திக் 2, கர்சினி 1,மாவட்ட தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் 2,காப்பாளர் துக்காராம் 2, கவுதம் சுபாஷ் சந்திரபோஸ் 2 ஆக மொத்தம் 63 சந்தாக்கள் வழங்கப் பட்டது. மாவட்ட கழகம் சார்பில் பெரியார் பிஞ்சுகளிடம் உண்டியல் வழங்கி சேமிக்கப்பட்ட உண்டியலை அடுத்த ஆண்டு பெரியார் பிறந்த நாளில் பெறப்பட்டு தலைமை கழகத்திடம் பிஞ்சுகள் மூலம் ஒப்படைக்கப்படும் இறுதி யாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.சா.இமய வரம்பன் நன்றி கூறினார்

மாணவர்களுக்கு பாராட்டு

தஞ்சை பெரியார்மணியம்மை பல்கலைக் கழக பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் நடத்திய பெரி யாரியல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஒசூர் மாவட்ட கழகம் சார்பில் பயனாடை அணிவித்து பெரியார் நூல்கள் வழங்கப்பட்டது.

பிஞ்சுகளிடம் உண்டியல்

இயக்கத்திற்கு சேமிப்பு பழக்கத்தை ஏற் படுத்தும் விதமாக பெரியார் பிஞ்சுகளிடம் மாவட்ட கழகம் சார்பில் உண்டியல் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment