கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள் கருத்தரங்கம்

காரைக்குடி, ஆக. 4- சிவ கங்கை மண்டல திராவிடர் கழகம் சார்பில் கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள் கருத்தரங்கம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

சிவகங்கை மண்டல திராவிடர் கழக தலைவர் சாமி.திராவிடமணி தலைமை வகித்து  உரையாற்றினார். சிவகங்கை மண்டல செய லாளர் .மகேந்திரராசன் அனைவரையும் வரவேற்று பேசினார். காரைக்குடி மாவட்ட தலைவர் .அரங்க சாமி, சிவகங்கை மாவட்ட தலைவர் சுப்பையா, இராம நாதபுரம் மாவட்ட தலைவர் எம்.முருகேசன், காரைக்குடி மாவட்ட செயலாளர் கு.வைகறை, சிவகங்கை மாவட்ட செயலாளர் பெ.ராசாராம்ஆகியோர் முன் னிலை வகித்தனர்.சிவகங்கை மாவட்ட இளைஞரணி செய லாளர் சேது.ஜெகதீசன் தொடக்கவு ரையாற்றி னார்.

சிரிப்பு மழையில் சீர் திருத்தம் விதைத்தவர்என்ற தலைப்பில்பல்துறை வித்தகர்செம்மலர் இதழின் துணை ஆசிரியர் சோழ.நாக ராஜன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் கலை வாணரின் பன்முகத் தன் மையையும் அவரது கொடையுள்ளத்தையும் விரி வாக எடுத்து பேசினார். அவரது சிந்தனைகளை எடுத்துக்கூறி அதனடிப் படையில் அமையப்பெற்ற பகுத்தறிவு பாடல்களை பாடி உரையாற்றினார். மேலும்  கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர் களின் கொடையுள்ளத்தையும் சிறப்புகளை யும் எடுத்துக் கூறி உரையாற்றினார்.

கருத்தரங்க நிகழ்வில்  காரைக்குடி மாவட்ட இளை ஞரணி தலைவர் தி.புரூனோ என்னாரெசு, காரைக்குடி மாவட்ட துணை செயலாளர் ..பழனிவேலு, நா.பாபு, வி.பெரியசாமி, கோவை மண்டல தலைவர் .கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காணொலி கருத்தரங்கை கழக சொற் பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா தொகுத்து வழங்கினார்.

முடிவில் சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர் .அனந்தவேல் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment