அரும்பாக்கம், ஆக. 4 கல்வி வள்ளல் காம ராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 28.07.2021 அன்று வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன் தலைமையில் சென்னை அமைந்தகரையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் மாணவர்கள் பயன் பாட்டிற்கும், பகுதியில் உள்ள நூலகத்திற்கும் அமைந்தகரை பகுதி நண்பர்கள் சார்பில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சென்னை மாநகர காவல் துறை துணை ஆணையர், சுந்தரவதனம் இ.கா.ப., திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சங்கர், சமூக ஆர்வலர் லோகாபிராமன் ஆகியோர் சிறப்பு விருந் தினர்களாகக் கலந்துக்கொண்டு உரை யாற்றினர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட துணை ஆணையர் சுந்தர வதனம் அவர்கள் தலைமை ஆசிரியர் குணச்செல்வி மற்றும் நூலகர் பிரேம் ஆகியோரிடம் மடிக்கணினிகளை வழங்கி அரசுப் பள்ளியின் சிறப்புகளையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் குறித்து சிறப்புரையாற்றி ஆசிரியர் பெருமக்களையும், மடிக்கணினிகளை வழங்கிய லோகாபிராமன் மற்றும் மென்பொருள் அமைத்து தந்த வெங்கடேஷ் அவர்களையும் பாராட்டி உரையாற்றினார்.
சமூகநீதியில் தமிழ்நாடு வென்றுள்ள தடங்களையும், கல்விக்கான தொடர் போராட் டத்தையும் முன்வைத்து திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என் னாரெசு பெரியார் உரையாற்றினார். இந்நிகழ் வில் கழக அண்ணாநகர் இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் ஆகாஷ், சென்னை மேற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித்குமார், கர்ணா, திமுக வழக் குரைஞர் முரளிதரன் மற்றும் வழக்குரைஞர் ஆதில், கார்த்திக், லாரன்ஸ், சரவணன், லல்லு மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment