தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு
சென்னை, ஆக.6 கோவிட் பெருந் தொற்றுக் காலத்தில் பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர் களை சர்வே ஆப் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் ஆக.10 முதல் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
ஒன்றியக் கல்வி அமைச்சகத்தின் ஆய்வில், கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள தாகவும், குறிப்பாகப் பெண் குழந் தைகள் மற்றும் மூன்றாம் பாலினக் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே அதிக அளவில் இடைநின்று விடுவ தாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் ஆண்டுதோறும் நடைபெறும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பிள்ளைகளைக் கண்டறியும் கணக்கெடுப்புப் பணியை இந்த ஆண்டு சிறப்பு கவனத்துடன் ‘சர்வே ஆப்’ மூலம் கணக்கெடுப்பு செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அதன்படி ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் ஆக.10-ஆம் தேதி முதல் ஆக.31ஆம் தேதி வரை கணக்கெடுப்பு நடைபெற
வுள்ளது.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘’கோவிட் பெருந்தொற்று காரண மாக 2020 மார்ச் முதல் தற்போது வரை சுமார் ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இதனால் 14 வயதில் இருந்து 19 வயதுடைய மாணவர்கள் கட்டு மானத் தொழிலாளர்களாகவும், செங்கல் சூளை, கல் மற்றும் மணல் குவாரி, தொழிற்சாலைகளில் வேலைக்குச் சென்றுள்ளனர். இதனால் கல்வியைக் கைவிட்டு குழந்தைத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். இவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதற்காகத் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களில், இதுவரை பாடப் புத்தகங்களைப் பெறப் பள்ளிக்கு வராதவர்களின் பட்டியலை வைத்துக் கணக்கெடுக்க உள்ளோம். இதற்காக உருவாக்கப்பட்ட செயலி யான ‘சர்வே ஆப்’ மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்க உள்ளோம். கணக்கெடுப்பு ஆக.10 முதல் ஆக.31ஆம் தேதிவரை நடைபெறும்.
காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை கள ஆய்வு செய்து உடனுக்குடன் பதிவேற்றம் செய் யப்படும்.
இப்பணியில் ஆசிரியர் பயிற்று நர்கள், பள்ளித் தலைமை ஆசிரி யர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடவுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment