சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை; இணையத்தில் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 6, 2021

சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை; இணையத்தில் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் தகவல்

சென்னை, ஆக.6 சட்டக்கல்லூரி களில் மாணவர் சேர்க்கைக்கு வரும் 26ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி தெரிவித்துள் ளார்.

சென்னை தலைமைச் செயல கத்தில், தமிழ்நாடு டாக்டர் அம் பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியின் மூலம் பயிற்று விக்கப்பட்டு வரும் 5 ஆண்டு (ஹா னர்ஸ்) சட்டப் பட்டப் படிப்புகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பயிற்று விக்கப்பட்டு வரும் 5 ஆண்டு சட்டப் படிப்புகளில் 2021- - 2022ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கும் நிகழ்வை, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி 4.8.2021 அன்று தொடங்கி வைத் தார். அதன் பின்னர் செய்தியாளர் களுக்கு அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி வருமாறு:-

 தமிழ்நாட்டில் உள்ள 14 அரசு சட்ட கல்லூரிகள், ஒரு சீர்மிகு சட்டக் கல்லூரி, ஒரு தனியார் சட்டக்கல்லூரி என மொத்தம் 16 சட்ட கல்லூரிகள் உள்ளன.

அவற்றில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,275 இடங்களுக்கான இணைய விண்ணப்ப படிவங்களை மாண வர்கள் சமர்ப்பிக்கும் நிகழ்வு தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

வரும் 26ஆம் தேதி வரை இந்த படிப்பிற்கு மாணவர்கள் விண்ணப் பிக்கலாம். மதிப்பெண் அடிப்படை யிலும், இடஒதுக்கீடு அடிப் படை யிலும் மாணவர் சேர்க்கை நடை பெறும்.

மாணவர்களுக்கு இணையம் மூலமாக பாடங்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டக் கல்லூரி அமைப்பதாக தி.மு.. தேர்தல் அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.  அதன்படி, படிப்படியாக அனைத்துமாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி அமைக்க நட வடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment