புதுடில்லி, ஆக.6 செலவு அதிகம் என்பதால் ரயில் களில் 'வை-பை' வசதி திட் டம் ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது.
ரயில்களில் பயணி களுக்கு இணையதள வசதி யை வழங்குவதற்காக வை-பை வசதியை ஒன்றிய அரசு ஏற்படுத்தி இருந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு இந்த திட்டத்தை அறிவித்த அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அடுத்த 4 அல்லது 4 ஆண்டுகளில் ரயில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் எனக் கூறியிருந்தார். அதன் படி முதற்கட்டமாக ஹவு ரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த திட் டத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது.
மக்களவையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் 4.8.2021 அன்று இதை தெரிவித்தார்.
இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், வை-பை தொழில் நுட்பம், அலைவரிசை கட் டணங்களின் வடிவத்தில் தொடர்ச்சியான செலவு களை ஏற்படுத்துவதுடன், இதன் செலவும் குறைந்த தாக இல்லை. அத்துடன் இந்த வசதி மூலம் பயணி களுக்கு போதிய அலை வரிசை கிடைப்பதும் இல்லை.
எனவே இந்த திட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மாநிலங் களவையில் உறுப்பினர் களின் பல்வேறு கேள்வி களுக்கு ஒன்றிய அமைச் சர்கள் 4.8.2021 அன்று எழுத்து மூலம் பதிலளித் தனர்.
இதில் உள்துறை இணை அமைச்சர் நித்யா னந்த் ராய், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், காஷ்மீரில் கடந்த 3 ஆண்டு களில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 630 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த சண்டை களில் 85 வீரர்களும் வீர மரணம் எய்தியதாகவும் அவர் கூறி னார்.
இதைப்போல மற் றொரு இணை அமைச்சர் (உள்துறை) அஜய்குமார் மிஸ்ரா கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, இந்தியாவில் கடந்த 2015 முதல் 2019 வரையிலான 5 ஆண்டுகளில் 1.71 லட்சம் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment