திராவிடர் கழகத் தலைவர் இரங்கல்
அ.இ.அ.தி.மு.க. அவைத் தலைவரும், மேனாள் அமைச்சரு மான திரு.இ. மதுசூதனன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (5.8.2021) காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
மேனாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் நம்பிக் கையைப் பெற்றவர். தமிழ்நாட்டின் சட்ட மேலவை, சட்டப்பேரவை ஆகியவற்றின் உறுப் பினராகவும், கைத்தறித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத் தினருக்கும், அவரது கட்சிப் பொறுப்பாளர் களுக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
சென்னை
திராவிடர் கழகம்
6.8.2021

No comments:
Post a Comment